Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோபாலபுரம்" வீடு.. கருணாநிதி கார்.. ஆனா "சரக்கு" இல்லயே.. படார்னு போட்டுடைத்த புள்ளி.. கவனித்த பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய விவாதத்தையும், சலசலப்பையும் சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று காலை 10.15 மணிக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேசினார் மாநில தலைவர் அண்ணாமலை.

அப்போது, 'வனவாசம்' என்ற புத்தகத்தில் கவிஞர்கண்ணதாசன் அற்புதமான விஷயத்தை எழுதியிருப்பார். கண்ணதாசனும், கருணாநிதியும் ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

Do you know about Karunanidhis Gopalapuram House and What does Sr Journalist Shyam say

ஏழை வியாபாரி: அப்போது ஏழை வியாபாரி தனது பழக்கூடையை வைக்கிறார். இதையடுத்து கழிவறைக்கு அந்த வியாபாரி சென்று விடுகிறார். பழக் கூடையை கண்ணதாசனும், கருணாநிதியும் பார்க்கின்றனர். கண்ணதாசனை பார்த்து திருடலாமா? என்று கருணாநிதி கேட்கிறார். அப்போது ஆரம்பித்த திருட்டு என்பது 1967ல் ஆட்சியை பிடித்து தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்... இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை அறிவித்த நிலையில், திமுகவின் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதியும் இதற்கு பதிலடி தந்திருந்தார்.

இந்நிலையில், அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான ஷ்யாம், ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "கலைஞர் கருணாநிதி, தன்னுடைய காரையும், வீட்டையும் வாங்கியது 1955-க்கு முன்பு.. இந்த குற்றச்சாட்டு அந்த காலக்கட்டத்தில் இருந்தே வந்து கொண்டுதான் இருக்கிறது.. அது முழு தவறு.. காரணம், 1957-லேயே கலைஞர் எம்எல்ஏவாவதற்கு முன்பே, கோபாலபுரத்தில் வீடு இருந்தது.. சமீபத்தில்கூட, அந்தவீட்டின் சொந்தக்காரர்கள், அதாவது, அந்த வீட்டை கலைஞருக்கு விற்றவர்கள் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்திருந்தார்கள்..

பழைய வீடு: அவர்களுக்கு அந்த வீட்டில்தான் திருமணம் நடந்துள்ளது.. தங்களது பழைய வீட்டைசுற்றிப்பார்க்க வேண்டும் என்று, வெளிநாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலினிடம் அனுமதி கேட்டு, இதற்கு பிறகு, ஸ்டாலினே அவர்களுக்கு அந்த வீட்டை சுற்றிக்காட்டினார்.. இந்த வீடியோவும் இணைய தளத்தில் உள்ளது.. இப்படி அந்த கோபாலவீட்டின் கதை, அவர்கள் வாங்கிய முதல் காரின் கதை.. அதற்கு பிறகு குளித்தலை எம்எல்ஏ, தஞ்சாவூர் எம்எல்ஏ, 67-ல் ஆட்சி என அவரது அரசியல் செல்கிறது.. இந்த அரசியலுக்கு முன்புவரை, தன்னுடைய எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் நம்பி கலைஞர், சம்பாதித்த சொத்துக்கள்தான் அவையெல்லாம்..

அதனால் இப்படி கொச்சைப்படுத்துவது அழகல்ல. அதனால் அண்ணாமலை அவர்கள், இந்த வரலாறையெல்லாம் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.. ஏனென்றால், எங்கள் காலத்தில் நாங்கள் படித்தும், கேட்டும், இதை பழகியதால் சொல்கிறோம். அண்ணாமலையின் குற்றச்சாட்டை புறந்தள்ளுகிறேன்.. ஊழல் பட்டியல் என்று இதை சொல்வதைவிட சொத்துப்பட்டியல் என்றுதான் சொல்ல வேண்டும்.. திமுக பிரமுகர்கள் நடத்தி வரும் கல்லூரிகள் மீதும் புகார் சொல்கிறார்.. அப்படி பார்த்தால், இந்த கல்லூரிகள் எல்லாம், 1999, 2004 ம் அண்டு காலகட்டத்திலேயே இருந்ததே.. அப்போது பாஜக, திமுகவுடன் கூட்டணியில்தானே இருந்தது?

கோபாலபுரம் வீடு: கல்லூரிகளின் இன்றைய வளர்ச்சியை வைத்துக்கொண்டு, இவைகளை பார்க்கக்கூடாது.. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நிறுவனம் எத்தகைய பிரச்சனைகளை, நெருக்கடிகளை சந்தித்திருக்கும்? ஒரு நிறுவனம் வளர துவங்கியபோது ஏற்பட்ட துன்ப துயரங்களை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது தவறு.. அதுவும் இல்லாமல், திமுக பிரமுகர்கள் இவர்கள் எல்லாருமே தேர்தலில் நிற்பவர்கள் என்பதால், வருமானவரித்துறையிடம், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் மனுக்களில் சொல்லப்பட்ட விஷயங்கள்தான்..

அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளது எல்லாம் பல்வேறு பத்திரிகை செய்திகள், ஆங்கில பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை, ஒரு வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் எல்லாம் பொதுப்படையானது.. பலருக்கும் தெரிந்த பல விஷயங்கள்தான்.. அதுவும் வீக்ல பத்திரிகையில் வெளியானவை.. அவர் வெளியிட்ட படங்கள்கூட அந்த பத்திரிகையில் வந்தவைதான்..

அண்ணாமலை ரொம்ப ஏழையாக இருக்கலாம்.. வீட்டுக்கு வாடகைகூட தர முடியாமல் இருக்கலாம்.. ஆனால், அவர் சொந்த கட்சிக்குள் நடத்தும் கூட்டங்களுக்கு எப்படி செலவு செய்யப்படுகிறது? அவர் கலந்து கொள்கிற கூட்டம், அதற்காக செய்யப்படும் ஏற்பாடுகள், அவர் நடத்தும் பல்வேறு இணைய சேவைகள்? இவைகளுக்கெல்லாம் செலவு செய்வது யார்? ஊழல் இருக்கக்கூடாது என்று அண்ணாமலை சொல்லும் மைய கருத்தை வரவேற்கிறேன்.. ஆனால் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை அவர் சொல்லவில்லை..

Do you know about Karunanidhis Gopalapuram House and What does Sr Journalist Shyam say

இப்படி வெறும் அவதூறாக குற்றச்சாட்டை சொல்வதால் எந்த பலனையும் அது தராது. இன்று வெளியிட்ட இந்த பட்டியலில் ஆதாரமும் இல்லை.. பரபரப்பு தந்த அளவுக்கு "சரக்கு" இல்லை. இதன்மூலம், திமுகவுக்கு மாற்று, தான் மட்டுமே என்பதை காட்ட அண்ணாமலை முயற்சிக்கிறார்.. இதில் உள்ள ஆபத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ செல்வமும் புரிந்து கொள்ள வேணடும்" என்றார்.

தொடர்ந்து ஷ்யாம் பேசும்போது, "அக்கியூஸ்ட்" என்ற வார்த்தையை அண்ணாமலை பயன்படுத்துகிறார்.. அது மிகவும் தவறான வார்த்தை.. ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு அது நன்றாகவே தெரியும்.. அக்யூஸ்ட் என்பது நீதிமன்றத்திலே, நாம் எப்போது ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல செய்கிறோமோ, அப்போதுதான் அந்த வார்த்தையே வரும்.. இது என்னவென்றால், ஒரு அரசியல்வாதி, இன்னொரு அரசியல்வாதி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறார்.. அவ்வளவுதான்.. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் தருவார்கள்.. அல்லது அவதூறு வழக்கு தொடருவார்கள்..

அதற்காக அக்கியூஸ்ட் என்ற வார்த்தையை பயன்படுத்துவது நாகரீகமான வார்த்தை இல்லை.. முதல்வர் பதவி வகிப்போரை அது கொச்சைப்படுத்துவதற்கு சமம். அதானி, மோடி, என்றெல்லாம் சொல்லும்போது, அதே வார்த்தையை பிரதமர் மீது பயன்படுத்த முடியுமா? ராகுல் காந்திகூட அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தவில்லையே.. "தொடர்பு" என்ற வார்த்தையைதானே பயன்படுத்தினார்.. அண்ணாமலைக்கு சிக்கல் என்னவென்றால், சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு மாதிரி.. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கிறார்.. இங்குள்ள தட்பவெட்பத்தை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையளர் ஷ்யாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+