மத்திய பட்ஜெட் தாக்கல்.. ‛ஒன்இந்தியா’ வாசகர்கள் கொடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? முழுவிபரம்
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் ஆன நிலையில் அதற்கு ‛ஒன்இந்தியா’ வாசகர்கள் ஆர்வமாக மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.
சென்னை: 2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தான் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து ‛ஒன்இந்தியா'வாசகர்களிடம் கருத்துகள் கேட்டிருந்தோம். ஏராளமான வாசகர்கள் ஆர்வமாக மத்திய பட்ஜெட்டுக்கு மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
பிரதமர் மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியாவை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் நேற்று நிர்மலா சீதாராமன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் வெளியிடப்பட்டன. வருமான வரி செலுத்துவோரின் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் எனும் நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நிர்மலா சீதாராமன் செவிசாய்த்தார்.

மத்திய பட்ஜெட் அம்சங்கள்
அதன்படி புதிய வருமான வரி முறையில் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில் அதனை ரூ.7 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் இனி தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக இருந்தால் அவர்கள் தங்களின் செலவீனங்கள் தொடர்பான ஆவணங்களை காண்பித்து வரி விலக்கு பெற்று கொள்ளலாம். மேலும் ஜீரோ வரிக்கான உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. மேலும் இளைஞர்களின் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப சேவைகளை விரிவாக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சாலை மற்றும் விமான போக்குவரத்து துறைக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் உள்பட ஏராளமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.

பிரதமர் மோடி பாராட்டு
இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பாராட்டி உள்ளனர். இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என ஒவ்வொருவரும் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி பிரதமர் மோடி கருத்துதெரிவிக்கையில், ‛‛வலுவான இந்தியாவை கட்டமைக்க இந்த பட்ஜெட் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது. புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்த பட்ஜெட் பெரும் பங்காற்றும். அனைத்து துறை எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது'' என பாராட்டு தெரிவித்து இருந்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அதேவேளையில் எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு எந்த திட்டங்களும், அறிவிப்புகளும் இல்லை என குற்றம்சாட்டி உள்ளன. நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சனை அதிகம் உள்ள நிலையில் அதுதொடர்பான அறிவிப்புகள் இல்லை எனவும், இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அந்த மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

‛ஒன்இந்தியா’ கருத்து கேட்பு
இவ்வாறாக நேற்றைய மத்திய பட்ஜெட் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து நாம் ‛ஒன்இந்தியா'வாசகர்களிடம் கருத்து கேட்டிருந்தோம். இதற்காக மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு உங்களின் மதிப்பெண் எவ்வளவு? என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்காக பதிலாக மொத்தம் 4 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருந்தன. 0 முதல் 35 மதிப்பெண் என முதல் ஆப்ஷனும், 36 முதல் 50 மதிப்பெண் என 2வது ஆப்ஷனும், 51 முதல் 75 மதிப்பெண் என 3வது ஆப்ஷனும், 76 முதல் 100 மதிப்பெண் என 4வது ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருந்தது.

வாசகர்கள் அளித்த மதிப்பெண்
இதற்கு வாசகர்கள் ஆர்வமாக வாக்களித்து மத்திய பட்ஜெட்டுக்கான மதிப்பெண்களை வழங்கினர். அதன்படி நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டுக்கு 0 முதல் 35 மதிப்பெண்களை 72.7 சதவீதம் பேர் வழங்கி உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக 36 முதல் 50 மதிப்பெண்களை 10.48 சதவீதம் பேரும், 51 முதல் 75 மதிப்பெண்களை 7.18 சதவீதம் பேரும், 76 முதல் 100 மதிப்பெண்களை 9.63 சதவீத வாசகர்களும் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications