அப்படி போடு.. ஒரே நாளில் முத்து முத்தாக.. 4 சிக்ஸர்ஸ்.. குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட முக்கியமான 3 அறிவிப்புகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.
நேற்று தமிழ்நாடு சட்டசபை அனலாக காணப்பட்டது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் முடிவு எடுக்காத ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபையில் நேற்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.
சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பிற்கு இடையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட 3 முக்கியமான அறிவிப்புகள் கவனிக்கப்படாமல் போய் விட்டது. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு..
அறிவிப்பு 1 - தமிழ்நாடு அரசு பொது தனியார் கூட்டு (பிபிபி) முறையில் சென்னைக்கு அருகில் அதிநவீன மெகா சினிமா சிட்டி நகரத்தை உருவாக்க உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதற்காக ₹1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சென்னையை மீண்டும் சினிமாவின் தலைநகராக்க இப்படி செய்துள்ளனர். தற்போது ஆந்திராவில் பிலிம் சிட்டி உள்ளதால் படம் எடுக்க பலரும் அங்கே செல்கின்றனர். இதனால் வருமானம் தொடங்கி வேலைவாய்ப்பு வரை தெலுங்கு மக்களே கிடைக்கிறது. இதை மாற்றும் வகையில் சென்னையில் பிரம்மாண்ட பிலிம் சிட்டி உருவாக்கப்பட உள்ளது.
அறிவிப்பு 2 - நேற்று கிளாம்பாக்கத்தில் காலநிலை பூங்கா மற்றும் தொல்லியல் விளக்க மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைய இருக்கும் பகுதிக்கு அடுத்துள்ள 17 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளதுடன், இப்பகுதியின் மாறுபட்ட சூழலியல் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் சுவையை வழங்கும். கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இந்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன .
அறிவிப்பு 3 - சென்னை வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையமாக புதுப்பிக்கப்படும். இங்கே அருங்காட்சியகம், புதிய சுற்றுலா தளம் எல்லாம் அமையாக்கப்படும்.
அறிவிப்பு 4- தமிழ்நாட்டில் இனி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான படங்களுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழு இந்த படங்களை தேர்வு செய்யும். தகுதி படத்திற்கு 7 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்அறிவித்துள்ளார் .












Click it and Unblock the Notifications