வஞ்சிரம் , வவ்வால்.. திடீர்னு சறுக்கிய மீன்கள்.. சென்னை காசிமேடு காலி.. இனி 60 நாளைக்கு இப்படித்தான்
சென்னை: சென்னை காசிமேட்டில் எப்போதுமே விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, ஒரே பரபரப்பும், பிஸியுமாக காணப்படும். ஆனால் நேற்றைய தினம் மீன் வாங்க கூட்டமே இல்லையாம்.. ஏன்?
எப்போதுமே ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

காரணம் : இதற்கு என்ன காரணம் என்றால், கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறும். இதுபோன்ற நேரங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகளை பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்செல்லும்போது படகுகள், வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளதால், கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்திருக்கிறது.
இந்த மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டால், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுவிடும். மீனவர்களுக்கும் வேலையின்றி தவிக்கும் நிலைமை ஏற்படும்.
படகுகள்: இந்த காலகட்டத்தில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகளை கடற்கரையில் நிறுத்திவிடுவார்கள்.. மேலும், மீன் பிடி தடை காலத்தை பயன்படுத்தி பழுதடைந்துள்ள விசைப்படகுகள் மற்றும் வலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். எனினும், சின்ன சின்ன படகுகள் மூலம், கரையோரத்தில் மட்டுமே மீன் பிடித்தல் நடைபெறும்என்பதால், மீன்களின் விலையும் ஓவராக அதிகரித்துவிடும்.
அந்தவகையில், இந்த வருடத்துக்கான மீன்பிடித் தடைக்காலம் நேற்று 14-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.. இந்த மீன் பிடி தடைக்காலம் மொத்தம் 61 நாட்கள் நடைமுறையில் இருக்கும். எனவே, முன்கூட்டியே மீனவர்கள், பதிவு செய்யப்பட்ட தங்குதளத்துக்கு கொண்டுவந்து படகுகளை நிறுத்திவிட்டனர்.
வஞ்சிரம் மீன்: காசிமேட்டிலும் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் நேற்றே கரைக்கு திரும்பிவிட்டன. எனவே, கடந்த வாரத்தை விட வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. எனினும், நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
கடந்த வாரத்தில் ரூ.1300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் தற்போது ரூ.800-க்கு விற்கப்படுகிறது. கடமா ரூ.200 வரை விலை குறைத்து குறைந்துவிட்டது.. மீன்கள் விலை குறைந்தாலும், அதை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.
கிராக்கி: வஞ்சிரம் - ரூ.800, வவ்வால் - ரூ.700, வெள்ளை வவ்வால் - ரூ.1200, சங்கரா - ரூ.300, கடமா - ரூ.100, நெத்திலி - ரூ.300, நண்டு - ரூ.300, இறால் பெரியது (டைகர்) - ரூ.1200, இறால் சிறியது - ரூ.600. என்று விற்பனையாகி கொண்டிருக்கிறது. ஆனால், இனிமேல்தான் இன்னும் ஒன்றரை மாதத்துக்கு மீன்விலை அதிகரிக்க போகிறது.. மீன்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட போகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications