உயில் பத்திரம்.. அப்பா உயில் எழுதாதபோது மகளுக்கு சொத்துரிமை உண்டா? உயில் இல்லாமல் சொத்து பிரிக்கலாமா
சென்னை: சம்பாதித்த சொத்துக்களை உயிலாக எழுதி வைப்பார்கள்.. ஆனால், பூர்வீக சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க முடியுமா? அப்பா உயில் எழுதி வைக்காத பட்சத்தில், மகளுக்கும் சொத்தில் உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன?
ஒருவர் உயிரோடு இருக்கும் காலத்திலேயே யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டு உயில் எழுதுவது, பிற்காலத்தில் பல சங்கடங்களை, சிக்கல்களை தீர்க்க உதவும்.

சுயநினைவு: அந்தவகையில், ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே "உயில் பத்திரம்" ஆகும்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்.. அதுவும் தான் சுயமாக சொந்தமாக சம்பாதித்ததை, சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைப்பதாகும்.
பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது. அம்மா, பாட்டி, மாமா, சகோதரன் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மூதாதையர் சொத்தாக கருத முடியாது. தாத்தா, பாட்டி இருந்தாலும்கூட, இந்த சொத்துக்களை பிரித்து வாரிசுகளுக்கு தர முடியாது.
நேரடி வாரிசு: உயில் எழுதி வைக்காவிட்டாலும்கூட, அவர்களின் நேரடியாக வாரிசு அடிப்படையில் பிள்ளைக்கு வந்துவிடும். ஒருவேளை, பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க வேண்டுமானால், தங்களின் பெயருக்கு சொத்துக்களை மாற்றி, அதற்கு பிறகே உயிலாக எழுத முடியும்..
அதேபோல, அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், பெண்களுக்கும் உரிமை உள்ளது.. திருமணமான பெண்களானாலும், திருமணமாகாத பெண்களானாலும், பெண்களுக்கும் இந்த சொத்தில் பங்கு உள்ளது.
பெண்களுக்கு உரிமை: அப்பா தான் சம்பாதித்த சொத்தை, உயில் எழுதாதபோதும், அவரது நேரடி வாரிசுகளுக்கு இந்த சொத்தில் சம உரிமை உள்ளது.. ஆனால், திருமணமான பெண்ணின் அப்பா, தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கோர முடியாது. ஒருவேளை, அதேபோல, அப்பா சுயமாக சம்பாதிக்காத, பூர்வீக சொத்தாக அது இருந்தால் அதில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், இந்து வாரிசுரிமை சட்டப்படி, தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்த பரம்பரை சொத்தில் பங்கு பெற வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது.
பூர்வீக சொத்து: "காலமான தந்தையின் சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இணை உறுப்பினர்களை விட, தந்தையின் நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்" என்று உச்சநீதிமன்றமும் சமீபத்தில் ஒருவழக்கில் தெரிவித்திருக்கிறது.
அதேபோல, விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, முன்னாள் கணவரின் பூர்வீக சொத்திலும் பங்கு உள்ளது.. அந்த முன்னாள் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலும்கூட, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது என்று சொல்கிறது சட்டம்.
வாரிசுரிமை சட்டம்: அதேபோல, உயில் இல்லாமல் சொத்துக்களை பிரிக்க முடியுமா? எப்படி பிரிப்பது? இதுகுறித்தும் சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.. இந்து வாரிசுரிமை சட்டம் 1956-ன்படி, சொத்தின் உரிமையாளர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அந்த சொத்தை முதல் வாரிசுகள் என்று சொல்ல கூடிய மனைவி, மகன், மகள் அல்லது அம்மா போன்றவர்களுக்கு பிரித்து தரலாம்.
இதுவே முதல் வாரிசுகள் இல்லாத பட்சத்தில், அதாவது உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்த சொத்தை 2-ம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு சொத்தை பிரித்து தரலாம்.. எனவே, உயில் எழுதுவது குறித்த சந்தேங்களை, வழக்கறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதும், ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications