சென்ட் ஆஃப் பார்ட்டியில் செம கோபம்.. உடைமைகளை எடுத்துகிட்டு விர்ரென வெளியேறிய டிஐஜி விஜயகுமார்
சென்னை: ஒரு முறை சென்னை அண்ணாநகரில் டிஐஜி விஜயகுமாருக்கு பிரிவு உபசார விழா நடத்திய போது அவர் போலீஸாரிடம் கடிந்து கொண்டு என்ன சொன்னார் தெரியுமா?
கோவை சரக டிஐஜியாக இருந்த விஜயகுமார் நேற்று முன் தினம் காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
டிஐஜியாக இருந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு பிறகு உயரதிகாரிகளில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 2 ஆவது நபர் விஜயகுமார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 1976 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ.மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பின்னர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். எனினும் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற வெறியுடன் படித்தார்.
2009 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதினார். ஐஏஎஸ் அதிகாரியாகும் அளவுக்கு அவர் மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் அவர் ஐபிஎஸ்ஸையே தேர்வு செய்தார். 2011 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய ஏஎஸ்பியாக தனது பணியை தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி காவல் நிலைய ஏஎஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டார்.
அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு எஸ்பியாக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றார். 2015 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட எஸ்பியானார். 2018இல் நாகை மாவட்ட எஸ்பி,2019 இல் சிபிசிஐடி எஸ்பி, 2021 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
பின்னர் அண்ணாநகர் காவல் மாவட்டத்தின் துணை ஆணையராக பொறுப்பேற்றார். ஜனவரி மாதம் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற இவர் கோவை சரக டிஐஜியாக அமர்த்தப்பட்டார். சிபிசிஐடி எஸ்பியாக இருந்த போது தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரித்தார். அது போல் சுரானா வழக்கில் இருந்த 103 கிலோ தங்க நகைகள் மாயமான விவகாரத்திலும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு ஆளுங்கட்சி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கையும் இவர்தான் விசாரித்தார். விசாரணையில் அந்த கொலையை நிகழ்த்தியவர்கள் பவாரியா கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. ஜாங்கிட் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இணைந்து பவாரியா கொள்ளையர்களை பிடித்தார்.
சென்னை அண்ணாநகரில் இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற நேரத்தில் அண்ணாநகரில் விடை கொடுக்கும் நிகழ்ச்சியை மற்ற போலீஸார் நடத்தினர். ஆனால் விழா நாயகனான விஜயகுமார் அந்த விழாவில் கலந்து கொள்ளவே இல்லை. அவரிடம் கேட்ட போது காவல் துறையினருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் என்பது கட்டாயம்.
இதற்கு ஏன் சென்ட் ஆப் நிகழ்ச்சி நடத்தி காவல் துறையின் பணத்தை வீணடிக்க வேண்டும் என கேட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்து அலுவலகத்தில் உள்ள தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுவிட்டாராம். இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியை இன்று தமிழகம் இழந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications