Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உணவின்றி மரவட்டை போல் சுருண்ட "சியான்"! நடிகர் விக்ரம் ராசியில்லாதவரா? பாலாவால் பட்டை தீட்டிய வைரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேது படத்திற்காக உடல் எடை பாதியாக குறைந்து சுருண்டு கிடந்த நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உச்சகட்டம்... ஒரு படத்தோட க்ளைமேக்ஸ் படத்துக்கு தான் முடிவு. பார்க்கும் ரசிகனுக்கு உணர்வுகளின் தொடக்கம். சேது ஒரு சாதாரண குடும்பத்து கல்லூரி மாணவன். அவன் எல்லா மாணவர்களையும் போல ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு ஜாலியாத்தான் வாழ்கிறான். ஒரே ஒரு அண்ணன். அண்ணனும், அண்ணியும் சேதுவை தங்கள் பிள்ளை போல் பார்த்துக்கொள்கிறார்கள்.

Do you know how Actor Vikram dedicated for Sethu movie climax scene


சேதுவின் வாழ்வில் அபி மாணவியாக குறுக்கிடுகிறாள். அபியின் பிராமணப்பெண் ஆச்சாரங்கள் சேதுவுக்கு திராவிட இளைஞர்கள் போல் நக்கலுக்கு உள்ளாக்கப்பட்டாலும் சேதுவின் மனதில் அபி குடி கொண்டு விடுகிறாள். மனநலமற்ற பைத்தியக்காரியின் மானம் காப்பாற்றும் சேதுவின் நல் மனம் அபிக்கும் இஷ்டமாகிறது.

ஒரு மோதலில் சேதுவின் தலையை உடைக்க அதில் மூளை செயலிழந்து சேது குழந்தையாகி விடுகிறான். அவனுக்கு அபி கூட யாரென்று தெரியவில்லை. அவனுக்கு 'பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் பைத்தியக்கார வைத்தியர்' இனியன் சம்பத் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேதுவின் காதல் இனி கானல் நீர் தான் என அபி நம்பிவிடுகிறாள்.

திரும்பி வரவே முடியாத நிலைக்கு சேது போய்விட்டான் என்பதை அபி உணர்ந்து கொள்ள மறுக்கிறாள். தன் முறைப்பையனுடன் திருமணம் செய்து கொள்ளும் முன் சேதுவைப் பார்க்க விழைகிறாள். சேதுவுக்கு அறுந்து போன நூல் ஒட்டியது போல் நினைவுகள் திரும்புகின்றன. ஆனால் அவனை சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறார்கள். கத்தி கத்தி தளர்ந்து அபி அவனை பார்த்து விட்டு கண்ணீர் துளிகளை சிந்தி தூரத்துக்கு போய் விட்ட பிறகு சேது அபியை பார்க்கிறான்.

ஒரு வழியாக இரவு அவன் அந்த வைத்தியசாலையிலிருந்து தப்பி அபியை காண ஆசையோடு வரும் போது அபி சடலமாக கிடக்கிறாள்.
கண்களை குளமாக்கும் இந்த உணர்வு படம் பார்ப்பவருக்கு ஏற்பட இரண்டு பேர் காரணம். சேதுவாகவே வாழ்ந்த விக்ரம். இந்த சூழ்நிலையை படைத்த பிரம்மன் பாலா. இருவரும் சேர்ந்து தியேட்டரையே அமைதியாக்கி ரசிகனை கலங்க வைத்த விஸ்வரூபம் இந்த உச்சகட்டம்.

Do you know how Actor Vikram dedicated for Sethu movie climax scene

பாலா படம் எடுக்கத் தீர்மானித்த போது முதலில் தனக்கு சோறு போட்டு பாதுகாத்த பாலுமகேந்திராவின் மனைவி அகிலாவின் நன்றிக்கடனுக்காக ' 'அகிலன்' என்றே தொடங்கினார். படம் ட்ராப்பாக கந்தசாமி என்கிற பாலாவின் ஊர்க்காரர் தயாரிக்க 'சேது' தொடங்கப்பட்டது. சேது தொடங்கும் போது நாயகன் விக்ரம் சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய ப்ரேக் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

சில மலையாளப் படங்களில் துண்டு துக்கடா ரோல்களில் நடித்தும், பின்னணி பேசியும் கிடைக்கும் பணத்தில் தன் காதல் மனைவி ஷைலாவையும், குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருந்தார். பாலா கூப்பிட்டதும் விக்ரமுக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டது கதையில். பாலா சொன்ன ஒரே கன்டிஷன் உடல் இளைக்க வேண்டும். விக்ரம் அப்போது பாலா என்ன சொன்னாலும் செய்திருப்பார். அப்படி ஒரு தவிப்பிலிருந்தார் விக்ரம்.

ஷுட்டிங்குக்கு சில மாதம் முன்பு விக்ரமைப் பார்த்த பாலா வியந்து போய்விட்டது தான் செம சம்பவம். உடல் பகுதியாக குறைந்திருந்தது. சுவாமிமலை, திருவிடைமருதூர் கோவில்களில் வைத்தியசாலை படப்பிடிப்பு தொடங்கியது. விக்ரம் திட உணவு எடுத்துக் கொள்ளாமல் கண்கள் உள்ளே போய் மோசமான நிலைக்கு போய் விட்டிருந்தார்.

காட்சி இன்னும் சிறப்பாக வர வேண்டுமென்பதற்காக கும்பகோணம் லாட்ஜிலிருந்து எல்லோரும் வாகனத்தில் வந்தால் விக்ரம் மட்டும் ஒன்பது கிலோமீட்டருக்கு மேல் நடந்தே வருவார். யூனிட்டில் உள்ள எல்லோரும் லஞ்ச் ப்ரேக் என சென்றால் விக்ரம் யூனிட் சாமான்களோடு முடங்கிப்போய் படுத்திருப்பார். அவரைக் கண்ட பாலாவுக்கு இந்த சினிமா மேல் கோபம் கோபமாக வந்ததே நிஜம். 'இதோ இந்த உணவின்றி மரவட்டையாக சுருண்டு கிடக்கும் இந்தக் கலைஞனையா ராசியில்லாதவன் என்கிறீர்கள். இவனை வைத்தே ஜெயித்துக்காட்டுகிறேன்' என்கிற பாலாவின் சபதத்தோடு விக்ரமும் சேர்ந்து கொள்ள விக்ரமுக்கும் தனி சபதம் இருந்தது.

தனக்கு விபத்து ஏற்பட்டு படுக்கையிலிருந்த போது வந்து பார்த்த தாய் மாமா மம்பட்டியான் நடிகர் 'கால் உடைஞ்சிடுச்சா.. இனி ஏதாவது மாற்றுத்திறனாளி ரோல் தான் கிடைக்கும்' எனச் சிரித்ததின் வீரியம் அவருக்குள் கனலாக கனன்று கொண்டிருந்தது.

"பாலா... எப்படியும் ஜெயிக்க வேண்டும் பாலா...அவர்களுக்கு முன்னால் நான் யார்னு காட்ட வேண்டும் பாலா" என்கிற விக்ரம் பேச்சோடு நிறுத்தாமல் பாலா நூறு சதவீதம் விரும்பியதை இருநூறு சதவீதமாக திருப்பிக்கொடுத்தார்.
சேது வெளியாகி பெரு வெற்றி பெற்றது. படம் பார்த்த எல்லோரும் சேது-அபியின் பிரிவின் வலியை தாங்க முடியாமல் விசும்பினார்.

மதுரையில் ஒரு பெண் தியேட்டரிலிருந்து வெளியே வந்து தரையில் உட்கார்ந்து பெருங்குரலெடுத்து கதற ஆரம்பித்தார். விக்ரம் தன் பெருங்கனவை சாதித்தார். பாலாவைக் கட்டிக் கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் விக்ரம். படத்தின் பெருவெற்றிக்கு முதல் காரணம் இளையராஜா. பாலா என்கிற பெருங்கனவாளனின் சின்ன உருவத்தைப் பார்க்காமல் அவன் கதையில் ஆழ்ந்து போனக்காரணம் அப்படத்தின் மனதை பிசையும் பின்னணி இசை.

படத்தில் எல்லோரையும் ஆடிப்போக வைத்த நிகழ்வு அதில் வரும் மினி க்ளைமாக்ஸ். அபி இறந்ததோடு படம் முடிகிறது. ஆனால் சேது தனக்கு குணமாகிவிட்டது, நான் நார்மலாகி விட்டேன் என சகோதரனிடமும், நண்பர்களிடம் சொல்லி கதறி இருந்தால் ஆறுதலோடு ரசிகன் வெளியேறி இருப்பான். ஆனால் சேது 'இனி என்ன இந்த வாழ்க்கை' என விரக்தியாக பைத்தியமாகவே வாழ முடிவெடுத்து பைத்தியக்கார ஆஸ்பத்திரி வண்டியில் ஏறும் போது கரையாத கல்நெஞ்சக்காரனும் கரைந்து விடுவான்.

இது தான் பாலா டச். அதை மேலும் மெருகூட்டியது இளையராஜாவின் இசை. படத்தின் க்ளைமேக்ஸ் விக்ரம் என்கிற நடிகனுக்கு தொடக்கம். அதோடு பார்த்த ஒவ்வொரு ரசிகனுக்கும் உணர்வின் தொடக்கம். ரசித்த (பதைத்த) க்ளைமேக்ஸ்... இவ்வாறு செல்வன் அன்பு என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+