தட்கலில் எப்படியாவது புக் பண்ணி எஸ்கேப் ஆயிடுங்க.. மிரள வைத்த அன்ரிசர்வ் கோச் வீடியோ.. பாருங்க
சென்னை: அன்ரிசர்வ் கோச் என்றாலே ஆயுசுக்கும் மறக்க முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். சமானிய மக்கள் பலரும் செல்லும் அந்த கோச்சில் உட்கார்ந்து செல்வதே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதில் 3 நாட்கள் எல்லாம் பயணித்து வருவது மிகப்பெரிய கொடுமையாகும்.
சமீபத்தில் ரயில்களில் அன்ரிசர்வ் பெட்டிகளை தாண்டி, புக்கிங் செய்து பயணிக்கும் ஸ்லீப்பர் கோச்சுகள், ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டி, ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டியிலும் கடந்த மாதம் கடுமையான கூட்டம் ஏற்பட்டது. புக்கிங் செய்த பயணிகளால் கூட ரயில்களில் ஏறி பயணிக்க முடியாத அளவிற்கு முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய பெட்டிகளில் ஏறினார்கள். இதை பார்த்து பலரும் ரயில்வேயை டேக் செய்து இதற்கு எதற்கு தட்கலில் புக்கிங் செய்து பயணிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

ஸ்லீப்பர் பெட்டிகளில் சர்வ சாதாரணமாக புக்கிங் செய்யாத பயணிகள் ஏறுவதும். அவர்களை டிடிஆர்கள் விரட்டுவதும் கடந்த மாதங்களில் அதிகமாக நடந்தது. கடந்த மாதம் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில் பல்லவன், வைகை, முத்துநகர், திருச்செந்தூர் என பல ரயில்களில் முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி பயணித்தனர். கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு அப்போது நிலைமை இருந்தது. போதிய ரயில்கள் இல்லாதது, பேருந்துகள் இல்லாதது போன்ற காரணங்களால் பயணிகள் ரயில்களில் பயணிக்க நாடினார்கள். இந்த விவகாரம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் அன்ரிசர்வ் பெட்டிகளில் இப்போதும் கூட்டம் கடுமையாக இருக்கிறது. வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களை நோக்கி வரும் பயணிகள் கடும் இன்னல்களை சந்தித்தபடி பயணித்து வருவது பார்ப்போரை கலங்க செய்யும். வேலைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும், பிழைப்பு தேடியும் வரும் தொழிலார்களின் முதல் பயணமே மிக கொடுமையானதாக இன்று வரை இருக்கிறது.
Welcome to Indian Railways 🤡 pic.twitter.com/ftxkTOGow0
— Gabbar (@Gabbar0099) May 8, 2024
தமிழ்நாட்டிலும் அன்ரிசர்வ்டு பெட்டியில் ஏறி மதுரைக்கோ அல்லது கோவைக்கோ இரவில் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.. சென்னையிலேயே மொத்த கூட்டமும் ஏறிவிடும் என்கிற நிலையில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதி மக்கள் எல்லாம் ஏறி இறங்குவது என்பது மிகவும் கடினமானது.
இந்நிலையில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு பயணி தூளி மாதிரி ஒன்றை கட்டி ரயிலில் பயணிக்க முயற்சி செய்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சமானியர்கள் அதிகம் செல்லும் வகையில், ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் ஏராளமான புதிய ரயில்களை போர்க்கால அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications