பிடிஆர் அப்படி சொல்ல.. ஸ்டாலின் சீற.. களேபரங்களுக்கு இடையில் "நைசாக" எஸ்கேப் ஆன அதிமுக! சிக்கிய பாஜக
சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபையில் பெரிய அளவில் களேபரங்கள் நடந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் மட்டும் எதிலும் தலையிட்டுக்கொள்ளாமல் அவையில் இருந்து வெளியேறி உள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபையில் நேற்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.
சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முக்கியமாக ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று வெற்றிபெற்ற தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலையே ஆளுநர் ஆர். என் ரவி ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு உடனே ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த தடை சட்ட மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாகிவிட்டது. இதன் மூலன் ஆன்லைனில் ரம்மி விளையாடினால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது சிறை மற்றும் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
அதோடு ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தடை செய்யப்படும். நேற்று இந்த தீர்மானத்தை தாக்கல் செய்யும் முன் ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான இன்னொரு தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன். அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன.
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய சபாநாயகர் அப்பாவுவிடம் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை,
ஆனால் அதற்கு முன்னதாக அதிமுகவினர் சபையில் இருந்தே வெளியேறிவிட்டனர். ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என்று கூறி அதிமுகவினர் அமளி செய்து.. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சரியாக ரம்மி விவாகரத்திற்கு முன்பாக வெளியேறிவிட்டனர். பாஜகவினர் மட்டுமே பூட்டிய சட்டசபைக்குள் மாட்டிக்கொண்டனர்.
நேற்று தலையை எண்ணி.. தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் கதவுகள் பூட்டப்பட்ட பின் பாஜகவினர் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்த பின் பேசிய அவர், ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. விதண்டவாதமாக பேசி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாட்டு மக்களின் நண்பராக செயல்பட மறுக்கிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் பொதுவெளியில் அரசு நடவடிக்கைகளை விமர்சிக்கிறார். பிரதமரிடம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி. ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.
வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். சட்டமன்றத்திற்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" அப்படியே விழுங்கி விட்டது என்றே அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன், என்று குறிப்பிட்டார்.
நேற்று இந்த நிகழ்வில் பேசிய பிடிஆர், ஆளுநர் மாளிகைக்கு
நான் இரண்டு கருத்துக்களை சொல்கிறேன். மொத்த செல்வாக 18. 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. அதில் 11.30 கோடி ரூபாய் ஆளுநரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த 11.30 கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை. அரசுக்கு தெரியாமல் இவ்வளவு பணத்தை செலவு செய்துள்ளனர். இது விதி மீறல். முழுக்க முழுக்க விதி மீறல். அவர்களின் சொந்த கணக்கிற்கு மாற்றி செலவு செய்துள்ளனர்.
இரண்டாவது.. "பெட்டி" செலவு.. அதாவது சின்ன செலவு என்று கூறி இதை செலவு செய்துள்ளனர். பெட்டி செலவிற்கு 11.30 கோடி ரூபாயா? இந்த நிதி எல்லாம் எதோ ஒரு நிறுவனத்திற்கு, சாரிட்டி நிறுவனத்திற்கு வழங்குகின்றனர். மற்ற மாநிலங்களில்.. பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மாநிலங்களில் ஆளுநருக்கு குறைவாகவே நிதி வழங்குகின்றனர்.
உதாரணமாக பாஜக ஆளும் கர்நாடகாவில் 25 லட்சம்.. கேரளா, மேற்கு வங்கத்தில் 25 லட்சம்.. உத்தர பிரதேசத்தில் 50 லட்சத்தை ஒரு கோடியாக மாற்றி உள்ளனர். நான் ஒரு வருந்தத்தக்க தகவலை தெரிவிக்கிறேன். செப்டம்பர் 21க்கு பின் நமக்கு வந்த பில்லில் இருக்கும் விவரங்கள்
தேநீர் விருந்து - ரூ. 30 லட்சம் ரூபாய்.
குடிமைப்பணி மாணவர்கள் மீட்டிங் - 5 லட்சம் ரூபாய்.
ஊட்டி கலாச்சார நிகழ்வு - 3 லட்ச ரூபாய்.
இதெல்லாம் இந்த பில்லில் வந்து இருக்கவே கூடாது. ஆனால் வந்து இருக்கிறது. ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க கூடாது என்று விதியில் இருந்தும், மாதம் மாதம் இவர் ஒரு சிலருக்கு மாத மாதம் கொடுத்துள்ளார். அணைத்து பணியாளர்களுக்கும் விதியை மீறி போனஸ் கொடுத்துள்ளனர். இதில் விதிகளை மீறி கையெழுத்து போட்டுள்ளனர், என்று கூறி உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications