இளையராஜாதான் கில்லாடின்னா! மணிவண்ணன் கில்லாடி ஸ்கொயர்! சாம்பிள் இதோ!
சென்னை: இசைஞானி இளையராஜா கில்லாடி என்றால், மணிவண்ணன் கில்லாடி ஸ்கொயர் என்பதற்கான சாம்பிள்தான் " இங்கேயும் ஒரு கங்கை" என்ற திரைப்படம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஒரு கில்லாடி ஒரு விதமென்றால் வேறொரு கில்லாடி வேறுவிதம்.... கலைமணி என்கிற கதாசிரியர் ஒருவர் இருந்தார். நல்ல கதைகளை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்களில் கலைமணியும் ஒருவர். "ஆத்தா ஆடு வளத்துச்சு. கோழி வளத்துச்சு. ஒரு நாய் மட்டும் வளர்க்கல. இந்த சப்பாணியத்தானே வளர்த்துச்சு.." என்கிற புகழ்வாய்ந்த வசனத்துக்கு சொந்தக்காரர் கலைமணி.
கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், மண்வாசனை, தெற்கத்தி கள்ளன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் இப்படி நிறைய நல்ல படங்களை தந்தவர். நிழல்கள், காதல் ஓவியம், வாலிபமே வா வா படங்களின் மூலம் தோல்வியால் துவண்டிருந்த பாரதிராஜாவுக்கு மண் வாசனையை கொடுத்து, சித்ரா லக்ஷ்மணன் என்கிற பி.ஆர்.ஓவை தயாரிப்பாளராக்கி வெற்றியை கொடுத்தவர்.
கலைமணி கதைகளும், வசனங்களும் எப்போதுமே நம் நெஞ்சை தொடுவது போல் இருக்கும். மணிவண்ணனிடம் கலைமணி ஒரு படமெடுக்க ரொம்ப நாளா கேட்கிறார். மணிவண்ணன் தொடர்ந்து பிஸி. ஒரு வழியா ஒரு நாள் ஓகே சொல்கிறார். உடனே கலைமணி ஓடியது இளையராஜாவிடம். ராஜாவோ படு பிஸி. 82,83,84 இந்தக்காலகட்டத்தில் ராஜா பிஸி. பிஸியோடு அவரது பாடல்களால் பல படங்கள் ஹிட். கலைமணிக்கு எப்படியாவது ராஜா பாட்டு போட்டா வசூல் மழைன்னு தெரிஞ்சு ராஜாக்கிட்ட தவம் கிடக்கிறார். ஆனால் நேரமில்லை ராஜாவுக்கு.
கலைமணி உடனே ராஜாவோட பாட்டுக்களை ரெக்கார்டிங் செய்து படம் எடுக்க முடியாத தயாரிப்பாளர்களை தேடுகிறார். அப்படி தேடி தேடிப் பார்த்து காசு கொடுத்து ஆறு பாடல்களை வாங்குகிறார். "தெற்குத்தெரு மச்சானே..." ஒரு டூயட். "அன்னத்த நினைச்சேன்...." ஒரு சோகப்பாட்டு. "ஒரு வில்ல வளைச்சு வச்ச புருவமோ..." ஒரு கர்நாடிக் ஸ்டைல் பாட்டு.
"சோலை புஷ்பங்களே..." ஒரு சோகப்பாட்டு. "ஆட்டம் தான்...உன்னோடு தான்..." ஒரு கிக் பாட்டு... இந்தப் பாட்டெல்லாம் கிடைச்சதும் நேரா மணிவண்ணனோடு உட்கார்ந்தார் கலைமணி. இந்த பாடல்களை ஆணி வேரா வச்சி ஒரு அழகான கதையை எடுத்தாரு. பாகப்பிரிவினை சிவாஜி ரோலை சந்திரசேகருக்கு கொடுத்து அந்த 7 நாட்களையே ரிப்பீட் அடிச்சி....ராஜாவும் தலையசைக்க அமரன் உதவியோடு படம் ரிலீசாகி பிச்சுக்கிட்டு போச்சு.
ஆட்டம் தான் பாட்டெல்லாம் வினுச் சக்ரவர்த்திக்கு தான் கொடுக்க முடிஞ்சுது. ஜனகராஜ் வில்லன் வேற.... அது "இங்கேயும் ஒரு கங்கை"..... ராஜா தான் கில்லாடின்னா கலைமணியும், மணிவண்ணனும் கில்லாடி ஸ்கொயர் தான்..... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications