அட! நம்ம சென்னை போலீஸா இப்படி.. தினமுமா.. அதுவும் இத்தனை பேரா.. சபாஷ் மக்களே!
சென்னை: சென்னை போலீஸ் ட்விட்டர் பக்கங்களின் வாயிலாக தினமும் 50 விதிமீறல் புகார்கள் பதிவாகி வருவதாகவும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. நம்மூரு மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது என்பது சர்வ சாதாரணம்,இதெல்லாம் குற்றமா என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள், மாட்டினால் போலீசுடன் சண்டை தான். ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லையே யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவது இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இதுதான் கள எதார்த்தம்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள். இப்படித்தான் சில மாதம் முனபு வரை சென்னையில் இருந்தது. ஆனால் சென்னை போககுவரத்து போலீசார் எடுத்த அதிரடி ஆக்சனால் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படும் நிலை வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என சென்னையில் பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் எப்படி நடந்தது என்றால், போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அல்ல.. பொதுமக்களின் சோதனையில் நடந்திருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.அப்படி புகார் அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். போலீஸ் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரும் சிக்கி இருக்கிறார்கள். நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொன்னால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து உடனே ஆக்சன் எடுக்கிறது சென்னை போலீஸ். போக்குவரத்து விதிமீறலுக்காக குறிப்பிட்ட நபருக்கு அபராதம் கட்ட சொல்லி அவரது செல்போனிற்கே நோட்டீஸ் பறக்கிறது.
இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு பதில் அளித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது சென்னை போக்குவரத்து போலீஸ். இந்நிலையில் சென்னை காவல் துறை இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக வலைதள செயலியை உபயோகப்படுத்துவதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காவல்துறையின் செயல்பாடுகள் சென்றடைவது எளிதாகியுள்ளது.
மேலும் சுமார் 16,000 நபர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையுடன் தொடர்பு கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளது.

இவ்வாறு சமூக வலைதள செயலியை பயன்படுத்தும் சென்னை பெருநகர காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 1,35,927 நபர்கள் பின் தொடர்கின்றனர். இச்செயலியானது "@chennaipolice" என்ற ஐடி மூலம் இயங்கி வருகிறது மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 75,271 நபர்கள் பின் தொடர்கின்றனர். இச்செயலியானது "@ChennaiTraffic" என்ற ஐடி வாயிலாக இயங்கி வருகிறது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் செயலியின் மூலம் சாலைப் பயனர்களுக்கு போக்குவரத்து ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் பிறருக்கு போக்குவரத்து மாற்றங்களைப் பற்றிய எச்சரிக்கை செய்திகளைத் தெரியப்படுத்துவதே முக்கியமான நோக்கம் ஆகும்.
சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சமூக ஊடக ட்விட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் பின்புறம் இருக்கையில் பயணம் செய்பவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனத்தை இயக்குவது, தவறான வாகன எண் பலகை பொருத்துதல், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், சாலையில் போக்குவரத்து நிறுத்தற்கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன.

இவ்வாறு பெறப்பட்ட ட்விட்டர் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, நடவடிக்கையின் விவரங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிரப்படுகின்றன. இதனால் கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் ட்விட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு (97.8% அளவில்) நடவடிக்கை எடுக்கப்பட்டு மீதமுள்ளவை முன்னேற்றத்தில் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 50 விதிமீறல்கள் பதிவாகி ட்விட்டர் பக்கத்தில் பறிமாறப்படுகின்றன. இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ட்விட்டர் பக்கத்தின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் கிடைக்கப் பெற்று வருகிறது.
சென்னை பெருநகர காவல்துறையினர் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரின் சமூக ஊடக செயலியான ட்விட்டர் பக்கத்தை கையாளுதல்கள் மூலம் போக்குவரத்து பக்கத்தில் பொதுமக்களின் வரவேற்பை பெறுவதுடன் அவர்களின் பாராட்டையும் பெறுகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் நடத்தையை CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன, இக்கேமராக்களின் சேவையானது போக்குவரத்து காவல் துறையினரின் "மூன்றாவது கண்" ஆக இருந்து வருகின்றன.
மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக ஊடகத்தை "நான்காவது கண்" எனப் பயன்படுத்தி தொடர்ந்து விழிப்புடனும் சமூகப் பொறுப்புடனும் இருக்கும் குடிமக்களை தீவிரமாக கண்காணிக்க இந்த சமூக வலைதளம் பயன்படுகிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் போலீசார் கூறியுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications