Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலாண்டு, ஆயுதபூஜை தொடர் விடுமுறை ஆரம்பம்.. 3380 சிறப்பு பஸ்கள்.. ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் வெளியூர் செல்வதற்கான சுற்றுலா திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அதேபோல பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

ஆயுதபூஜை பண்டிகை வருகிற அக்டோபர் 1ம் தேதி வருகிறது.. இதையடுத்து, வரும் 27ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்படுகிறது.. இதன்காரணமாக ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்..

quarterly exam 3380 special buses Tn Government

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட முடிவாகியிருக்கிறது.. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது..

அப்போது, பண்டிகை, மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, வருகிற 30ந் தேதி வரை 3,225 சிறப்பு பேருந்துகள் உள்பட 11,593 பேருந்துகள் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு பேருந்துகள்

அதேபோல தீபாவளி பண்டிகைக்கு, சென்னையிலிருந்து அக்டோபர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை 4,253 ஸ்பெஷல் பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும், 9,963 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 24,607 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதேபோல, சென்னை கோவை இடையே சிறப்பு ரயில் வரும் ஞாயிறு முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமைகளில் இந்த ரயில் கோவையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கோவைக்கும் செல்கிறது. நாளை மறுநாள் அதாவது 28ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி வரை இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

காலாண்டு விடுமுறை

இந்த பண்டிகைக்காலம் மற்றும் தொடர் விடுமுறையுடன் மாணவர்களின் காலாண்டு விடுமுறையும் சேர்ந்து கொள்கிறது.. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி துவங்கி நடந்து இன்று 26ம் தேதியுடன் கடைசி தேர்வு முடிவடைகிறது. நாளை முதல் முதல் காலாண்டு விடுமுறை துவங்குகிறது.

அரசு பள்ளிகளில் நாளை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மொத்தம் 10 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க போகிறது.. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நேற்றே காலாண்டு தேர்வு முடிவடைந்துவிட்டு, விடுமுறையும் துவங்கிவிட்டது.. வரும் அக்டோபர் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுவதால், வெறும் 6 நாள் மட்டுமே விடுமுறை அவர்களுக்கு கிடைத்துள்ளது..

பள்ளிக்கல்வித்துறை

ஆனால், விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் எதுவும் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்கான வாய்ப்புகளும் உள்ளதால் மாணவ, மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் விடுமுறையை மிகவும் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காலாண்டு விடுமுறை தவிர, ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையும் கிடைக்கும் என்பதால், மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் காத்துள்ளனர்.

அதேபோல அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனால் வெளியூர் செல்வதற்கான சுற்றுலா திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.

ஸ்பெஷல் பஸ்கள் இயக்கம்

இந்நிலையில், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "செப்.26, 27, 29, 30 தேதிகளில்... பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி செப்.26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2,430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 400 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 250 பேருந்துகளும் இயக்கப்படும்.

ஈரோடு, திருப்பூர்

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக அக்.4, 5-ம் தேதிகளில் அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் பயணிக்க இதுவரை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கண்காணிப்புக் குழு

இதனிடையே, ஆயுதபூஜை விடுமுறையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் அதைத் தடுக்க தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனை சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் இரா.கஜலட்சுமி எச்சரித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+