தலைமை ஒதுக்கிய இடங்களிலும்.. விசிக-விடம் தட்டிப்பறித்த திமுகவினர்! நகராட்சி, பேரூராட்சிகளில் குமுறல்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யும் மறைமுக தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒரு நகராட்சி, பேரூராட்சியில் பதவிகளை இழந்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தனித்து கைப்பற்றியுள்ளது.
ஆனாலும் திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர்கள் பதவிகளை ஒதுக்கியது..

கூட்டணி தர்மம் மீறல்
இவ்வாறு ஒதுக்கினாலும் கூட நேற்று நடந்த மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவர்கள் தேர்வு செய்யும் மறைமுக தேர்தலில் பல இடங்களில் திமுகவின் கூட்டணி தர்மம் பல இடங்களில் மீறப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கிய நகராட்சி, பேரூராட்சிகளை திமுகவின் கைப்பற்றினர்.

ராஜினாமாவுக்கு வலியுறுத்தல்
இதனால் கூட்டணி கட்சியினர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், ‛‛கூட்டணி தர்மத்தை மீறியவர்களின் பதவிகளை பறிக்க வேண்டும்'' என வலியுறுத்தினர். இதையடுத்து காட்டமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், ‛‛கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுவினர் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்து வந்து என்னை சந்திக்க வேண்டும். மேலும் கழக தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறேன்'' என்றார்.

நெல்லிக்குப்பம்
திமுகவினர் பல இடங்களில் கூட்டணி தர்மத்தை மீறியதில் விடுதலை சிறுத்தைகள் 2 பதவிகளை இழந்துள்ளனர். அதன்படி கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து திமுக மனு தாக்கல் செய்தது. திமுகவின் ஜெயந்தி 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

தருமபுரி மாவட்டம்
இதேபோல் தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் சின்னவேடி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இவரை எதிர்த்து திமுகவின் சாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றி எங்கே
இதுதவிர திமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பதவிகளை பெற்றனர். கடலூர் மாநகராட்சி துணை மேயராக தாமரைசெல்வன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக சுமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திண்டிவனம் நகராட்சி துணை தலைவராக ராஜலட்சுமி, ராணிப்பேட்டை நகராட்சி துணை தலைவராக ரமேஷ் கர்ணா வாகை சூடினார். கடலூர் மாவட்டம் பென்னாடம் பேரூராட்சி தலைவராக அமுதலட்சுமி போட்டியின்றி தேர்வானார். அதேபோல் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சி துணை தலைவராக வினோத், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி துணை தலைவராக லலிதா ஆகியோர் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications