மணிவண்ணனின் நூறாவது நாள்! ஹிட்டடித்த மொட்டை கேரக்டர் உருவானது எப்படி! சபாஷ் சத்யராஜ்
சென்னை: நூறாவது நாள் படத்தில் சத்யராஜின் மொட்டை கேரக்டர் எப்படி உருவானது தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வில்லன்களில் ரகுவரனுக்கு முன் பேசப்பட்டவர் சத்யராஜ்... சத்யராஜ் ஹீரோவாக நடித்த படங்களை விட அவரின் வில்லன் படங்கள் தான் அவர் மேல் ஈர்ப்பு கொள்ள செய்தன. ஆரம்ப காலங்களில் ரகுவரனுக்கு போலவே சத்யராஜுக்கு நிறைய வாய்ப்புக்கள் ரஜினி கொடுத்தார்.

தம்பிக்கு எந்த ஊரு, நான் மகான் அல்ல, மிஸ்டர் பாரத் என.... சத்யராஜ் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த போது வெறுப்பாகி நமக்கு நடிப்பு செட்டாகாது போல. இயக்குனராகலாம்னு முடிவெடுத்து அவரே கதைகள் எழுதலாமோ என யோசிக்கிறார்.
அப்போது ஆர்.சுந்தர்ராஜன் அவர்களோடு பழக்கம் ஏற்படுகிறது. ரெண்டு பேரும் கோவைக்காரர்கள் என்பதாலும் 'பயணங்கள் முடிவதில்லை' என்கிற ஹிட் படத்தை கொடுத்ததாலும் அவரோடு நெருக்கமாக பழகுகிறார் சத்யராஜ். ஒரு முறை சுந்தர்ராஜன், சத்யராஜ் ஒரே ரயிலில் பயணிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
அப்போது சத்யராஜிடம் ஒரு கிரைம் கதையை சொல்கிறார் சுந்தர்ராஜன். அதில் சில திருத்தங்கள் சொன்ன சத்யராஜின், கதை ஞானத்தை புகழ்கிறார் சுந்தர்ராஜன். அந்தக் கதையில் சத்யராஜுக்கும் ஒரு ரோல் கிடைக்கிறது. சுந்தர்ராஜனின் புகழ்ச்சியில் சத்யராஜ், தானே ஒரு கதையை எழுதுகிறார். தன் கதையை மணிவண்ணனிடம் சொல்கிறார்.
மணிவண்ணன் "கதை நன்றாக இருக்கிறது. இதை நிச்சயம் நானே இயக்குகிறேன். ஆனால் இப்போது நான் வேறொரு படம் இயக்குகிறேன். நீ டிஸ்கஷனுக்கு வா" என அழைக்கிறார். டிஸ்கஷனில் ஒரு மொட்டைக் கதாபாத்திரம் வருகிறது. அதை சத்யராஜே ஏற்க வேண்டும் என அடம் பிடிக்கிறார் மணிவண்ணன். அப்படி சத்யராஜ் நடிக்க நூறாவது நாள் ஹிட்டாகிறது.
நூறாவது நாள் ஹிட்டானதும் மணிவண்ணன் அதே தயாரிப்பாளருக்கு '24 மணி நேரம்' பட டிஸ்கஷனில் இறங்குகிறார். 24 மணிநேரம் படத்தில் நாயகக் கதாபாத்திரமே அந்த வில்லன் பாத்திரம் தான். சத்யராஜ் மணிவண்ணனிடம் 'வீணை எஸ்.பாலச்சந்தர் அல்லது நம்பியாரை போடலாம்' என்கிறார். மணிவண்ணனோ நீ தான் அந்த வில்லன் எனக்கூற, சத்யராஜ் இயக்குனராக வேண்டும் என்பதால் மறுக்க, மணிவண்ணன் தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்து சத்யராஜை நடிக்க வைக்கிறார்.
X.W.ராஜரத்னம் என்கிற கேரக்டர் ஒரு பணக்கார முதலை. காமவெறி பிடித்த மிருகம். பார்க்க சாதுவான தோற்றம் கொண்ட மீசை மழித்து நல்ல லுக் கொடுக்கும் ராஜரத்னத்தின் காமவெறிக்கு ஏற்ற வில்லன் சத்யராஜ் என மணிவண்ணன் கணித்தது எவ்வளவு அருமை. கொலை செய்யும் போது அசால்ட்டுதான். சட்டையை கழட்டி விட்டு இளவரசியை ரேப் செய்ய வரும் போது அவர் உடல் ரோமங்கள் கூட கொடூரமாக தெரிந்தன.
வில்லனின் பஞ்ச் டயலாகுக்கு கை தட்டல் கிழிந்தன. படம் வெற்றி. சத்யராஜுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. சத்யராஜின் கதையை மணிவண்ணன் தெலுங்கில் 'தர்ஜா தொங்கா' என எடுத்தார். அதுவும் தெலுங்கில் வெற்றி பெற்றது. சுமன் ஹீரோ. வில்லன் சத்யராஜ்.. சரணாலயம் (இயக்கம் சுந்தர்ராஜன்), நூறாவது நாள், 24 மணி நேரம் தயாரிப்பு எஸ்.என்.எஸ்.திருமால். நடிப்பு மோகன், நளினி....
இப்போ லிங்க் கிடைச்சிருக்குமே. இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications