சிக்னல் இல்லாத ஊருக்கு கூட.. போன மகளிர் உரிமைத்தொகை! பெண்களை வியக்க வைத்த ரூ.1000! வந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மொபைல் சிக்னல் கூட எடுக்காத சில கிராமங்களுக்கு முக்கியமான முறையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது மேலும் 1.40 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு ரூ. 1000 ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் பெண்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

எப்படி இணைவது?: தற்போது புதிதாக விண்ணப்பம் செய்யபவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இதில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் விண்ணப்பிக்கலாம். வேறு சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.

அதன்படி மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

இந்த மாத இறுதிவரை அவர்களுக்கு விண்ணப்பங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இணையம் இல்லா இடத்திலும்; அதன்படி தமிழ்நாட்டில் மொபைல் சிக்னல் கூட எடுக்காத சில கிராமங்களுக்கு முக்கியமான முறையை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கி வருகிறது.

நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு கூட மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. அங்கே வங்கிக்கு பணம் கொடுக்காமல் மணி ஆர்டர் போல கூட்டுறவு வங்கி வழியாக பணம் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கியில் இல்லையென்றால் கணக்கு தொடங்கி அங்கே பணம் வழங்கப்படுகிறது.

பல இடங்களில் போன் சிக்னல் கூட இருக்காது. இதனால் பணத்தை கொடுப்பதில் சிக்கல் வரும். இதனால் கூட்டுறவு வங்கிகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி அதன் வழியாக பணம் வழங்க முடிவு செய்துள்ளது.

எப்போது வரும்?: மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி விரிவாக்கம் செய்யப்படும் விண்ணப்பங்கள் அடுத்த 2 வாரங்களில் ஏற்கப்படும். அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஜூலை 12ம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும். ஜூலை 14ம் தேதி 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்கில் சோதனை செய்யப்படும். ஜூலை 15ம் தேதி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதேபோல் ஆகஸ்ட் மாதமும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக திருமணம் ஆன குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்ய முடியும். அருகே உள்ள நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சென்று இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை செய்யலாம்.

அதை பூர்த்தி செய்து கொடுக்கலாம். நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான அத்தாட்சி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஆக வரும். ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர், இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+