Its an emergency! வெடிகுண்டு மிரட்டலை சொல்லாமல் மைக்கில் மாணவர்களை எச்சரித்த பள்ளி நிர்வாகத்தினர்
சென்னை:அவசரம் அனைவரும் மைதானத்திற்கு உடனே வாருங்கள் என மைக்குகளில் பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.
சென்னையில் 13-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலை மர்ம நபர் கொடுத்திருந்தார். தொலைபேசிக்கு போன் செய்யாமல் இமெயில் முகவரிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகள் அனைத்துமே பல்வேறு கிளைகளை கொண்டவை. இவை பிரபலமான பள்ளிகளும் கூட! இந்த பள்ளிகளில் பல்வேறு அரசியல்வாதிகளின் பிள்ளைகள், சின்னத்திரை பிரபலங்களின் பிள்ளைகள், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காலை 10.40 மணிக்கு இந்த மெயில் வந்துள்ளது. அதில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. அவை வெடித்து சிதறுவதற்குள் குழந்தைகளையும் மாணவர்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் இந்த மெயிலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து போலீஸாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில் வகுப்பறைகளில் இருந்த மாணவர்களை மைதானத்திற்கு மைக் மூலம் அழைத்து வரவழைத்தனர். பள்ளிகளுக்கு யாரேனும் புதுநபர்கள் வந்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவர்களின் புத்தகப்பை, சாப்பாட்டு பைகளையும் பள்ளிகளிலேயே வைத்துவிட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளில் தேடிய நிலையில் வெடிகுண்டு மிரட்டலானது புரளி என தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து மாணவர்கள் சிலர் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில், நாளை எங்களுக்கு கண்காட்சி இருக்கிறது. அதற்காக நாங்கள் அந்த பணிகளில் சந்தோஷமாக பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
அப்போது மைக்கில் Emergency என அறிவித்து வகுப்புகளை விட்டு வெளியே வருமாறு பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். இதையடுத்து நாங்கள் வந்தோம். வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடித்துள்ளார்கள். இப்படி எதற்காக பொய் சொல்ல வேண்டும். இவர்களை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications