"கோட்டை குலுங்குது".. அட அவரா? இங்கேயா?.. அப்ப ஸ்டாலின் முடிவு என்ன.. லிஸ்ட் பெருஸ்ஸா போகுதே.. பரபர
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பதற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
விரைவில் தமிழக டிஜிபி ஓய்வு பெறுகிறார்.. புதிய டிஜிபிக்கு தகுதியானவர்கள் லிஸ்ட்டை, சமீபத்தில் தமிழக அரசு, மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்துக்கு அனுப்பிவைத்திருந்தது.
அந்த லிஸ்ட்டில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், பிகே ரவி, ஏகே விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

புது லிஸ்ட்: மாநில அரசு அனுப்பிய இந்த பெயர் பட்டியலிலிருந்து ஆணையம் 3 நபர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமுன்தினம் டெல்லியில் நடந்தது.. இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டிலிருந்து சென்ற அதிகாரிகளிடம் பல்வேறு கருத்துகளையும் கேட்டு தெரிந்துகொண்டராம்.
எப்படியும் ஓரிரு நாட்களில், ஆணையம் 3 அதிகாரிகளின் பெயர்களை தேர்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிவைக்கும் என தெரிகிறது..
புது டிஜிபி: ஆனால், டிஜிபியின் பதவிக்காலம் முடிந்தாலும்கூட, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கு பதிலாக, அரசு, தகுந்த காரணங்களை சொல்லி இப்போதைய டிஜிபியையே பணி நீட்டிப்பு செய்யவைக்க முடியுமாம்.. எனினும், அரசு அப்படி செய்வதாக தெரியவில்லை. தற்சமய நிலவரப்படி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, ஏகே விஸ்வநாதன், பிகே ரவி ஆகியோரின் பெயர்கள் டாப் லிஸ்ட்டில் இருப்பதாக சொல்கிறார்கள்.
டாப் லிஸ்ட்: இந்த 4 பேர்களிலும், டாப்பில் உள்ளது சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் பெயர்தானாம்.. சென்னையில் பெரியளவில் எந்த பிரச்னையும் இல்லாது பார்த்துக்கொண்டதாக முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்றிருப்பதால், அநேகமாக அடுத்த டிஜிபியாக நியமிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
ஒருவேளை சங்கர் ஜிவால் டிஜிபியாக நியமிக்கப்பட்டால், அவருடைய சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு அடுத்த போட்டி ஆரம்பமாகி விட்டதாம்..
அதுக்காக ஒரு ரேஸ் தனியாக நடந்துகொண்டிருக்கிறதாம்.. முக்கியமாக, அமல்ராஜ், சந்தீப்ராய் ரத்தோர், டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆபாஷ் குமார் போன்றோர் டாப்லிஸ்ட்டில் இருப்பதாக சொல்கிறார்கள்.. அதேபோல, காலியாகும் மற்ற பதவிகளைப் பிடிக்கவும் போட்டி நிலவுகிறது. வரும் 28-ம் தேதிக்கு முன்பாகவே அடுத்த டி.ஜி.பி, சென்னை கமிஷன் யார் என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்" என்றனர் விரிவாக.
இதுஒருபக்கம் இருந்தாலும், டிஜிபி என்ற உயர்ந்த பதவிக்கான நியமனம் எப்படி நடைபெறுகிறது தெரியுமா? டிஜிபி எப்படி தேர்வு செய்யப்படுகிறார் தெரியுமா? அதற்கான விதிமுறைகள் என்னென்ன?
கோளாறுகள்: கடந்த 2018 டிசம்பர் 12-ம் தேதி சுப்ரீம்கோர்ட் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான், டிஜிபி தேர்வு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக அந்தந்த மாநில அரசுகள், தங்களுக்கு விரும்பிய முறையில், தங்களுக்கு சாதகமான நபர்களை காவல்துறை தலைவர்களாக நியமித்து வந்தது.
குளறுபடிகள்: அதில் எழுந்த ஏராளமான குளறுபடிகள் காரணமாகத்தான் டிஜிபி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்து தந்தது.. இப்போதைய டிஜிபி என்பதாக ஒருவரை நியமிக்கும் முறையை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. டிஜிபியாக நியமிக்கப்படுபவருக்கு குறைந்தபட்சம் 6 மாதமாவது பணிக்காலம் என்பது இருக்க வேண்டும். அதேபோல் ஒருவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டால் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து அடுத்த 2 ஆண்டுகள் வரை அந்தப் பணியில் அவர் தொடரலாம்.
அந்தவகையில், புதிய டிஜிபியை தேர்ந்தெடுக்க வேண்டுமானால், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், 3 முதல் 5 அதிகாரிகளின் பெயர்கள், டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி எனப்படும் இந்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்..
பணியில் உள்ள டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே, இந்த பெயர்களை அரசு பரிந்துரைக்க வேண்டும். பிறகு, அந்த பெயர்களில் யார் பொறுப்பிற்கு தகுதியானவர் என்று பரிசீலித்து, அதிலுள்ள 3 அதிகாரிகளின் பெயர்களை மறுபடியும் அரசுக்கு, யுபிஎஸ்சி பரிந்துரைக்கும்.
பரிந்துரைகள்: பணியில் சேர்ந்த ஆண்டு என்ன? பணியில் இருந்த வருடங்கள் எத்தனை? போன்றவைகளின் அடிப்படையிலும், சீனியாரிட்டி வரிசைப்படியும், யுபிஎஸ்சி மாநில அரசுக்கு டிஜிபி பெயர்களை பரிந்துரைக்கும்... இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஒருவரையே, மாநில அரசு உடனடியாக டிஜிபியாக அறிவிக்கும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications