ஆண்டுக்கு ரூ 5 லட்சம்! மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டையை பெறுவது எப்படி?
சென்னை: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எனும் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீட்டை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த காப்பீட்டு திட்டத்தை பெற என்னென்ன ஆவணங்கள் எல்லாம் தேவை என்பதையும் விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ 8000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வர் காப்பீடு திட்டத்தை போல் மத்திய அரசின் இந்த ஆயுஷ்மான் யோஜனா பாரத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 1354 சிகிச்சைகளுக்கு இந்த அட்டையை பயன்படுத்தலாம்.
17 ஆயிரம் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையை பெறலாம். இதய அறுவை சிகிச்சைகள், மன ஆரோக்கியம், பல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பெற முடியும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எளிதான விஷயம். இதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம். முதலில் healthid.ndhm.gov.in என்ற மத்திய அரசின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்திற்கு சென்றதும் create ABHA number என இருக்கும். அதை பெற உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாக கொடுக்கலாம்.
ஆதார் எண்ணை வைத்து உள்நுழையும் போது உங்களுடயை ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண் வரும். அந்த எண்ணை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டை இருக்கும். அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இன்னொரு முறையிலும் கார்டை பெறலாம். முதலில் பிளே ஸ்டோரில் PM-JAY செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் செயலியில் சென்று உள்நுழை என்பதை கிளிக் செய்யவும். ஆயுஷ்மான் செயலியில் பயனாளி விருப்பத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் ஓடிபி வரும்.
அதன் பிறகு செயலியில் கேட்கப்படும் உங்கள் மாநிலம், மாவட்டம் ஆகியவற்றை டைப் செய்து ரேஷன் கார்டு எண் போன்ற தகவல்களை அளித்துவிட வேண்டும். பின்னர் அங்கீகாரம் பெற ஆதாரின் ஓடிபி, கைரேகை, கருவிழி ஸ்கேன், முக அங்கீகாரம் ஆகிய அனைத்து விருப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் ஆதார் ஓடிபி என்பதை தேர்வு செய்யவும். இணைப்பு இல்லை என்றால் முக அங்கீகாரம் (face recognition)என விருப்பத்தை தேர்வு செய்யவும். யாருடைய பெயரில் கார்டு எடுக்கப்பட வேண்டுமோ அந்த நபரின் புகைப்படத்தை எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்கள் முகவரி, மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். இப்போது ஆயுஷ்மான் திட்டம் தயாரிப்பதற்கான உங்கள் eKYC செயல்முறை நிறைவடைந்தது, இதன் மூலம் இந்த திட்டத்தை பெற தகுதி உடையவர் என்றால் தானாக அங்கீகரிக்கப்படும். அதன் பிறகு இந்த கார்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications