மின் இணைப்பு வேணுமா? புதிதாக மின் இணைப்பு பெற வேண்டுமானால் "இதுதான்" ஒரே சாய்ஸ்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: புதிதாக மின் இணைப்பு பெறுபவர்கள் மொத்தம் 2 லட்சம் பேர் தமிழகத்தில் காத்திருப்பதாக சொல்கிறார்கள். இதையடுத்து, அரசுக்கு முக்கிய கோரிக்கைகளும் பறந்துள்ளன.
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பினை, மாநில அரசு தன்னுடைய வசமே வைத்திருக்கிறது.. இதற்காகவே, தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.. இந்த அமைப்பின் கீழ் 2 விதமான துணை அமைப்புகள் உள்ளன.

ஒன்று, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) மற்றொன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆகும்.
மாற்றங்கள்: கரண்ட் கனெக்ஷன் புதிதாக வேண்டுமானால், அதற்கான வசதிகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்து வருகின்றன.. வழக்கமாக, புதிய இணைப்பை பெற வேண்டுமானால், கஸ்டமர்களுக்கு கால அளவு 30 நாட்களாக இருந்தது.. பிறகு, விஷயத்தில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முடிவு செய்து, சில மாற்றங்களம், திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன.
அதன்படி, புதிதாக மின் இணைப்பு வேண்டும் என்று கேட்டால் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள்ளாகவே, வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.. அத்துடன், 3 நாட்களில் புதிய மின் இணைப்பை அளிக்க வகை செய்யப்படும், மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமெனில் 60 நாட்கள் வரை ஆகலாம் என்று அறிவிப்பு வெளியானது..
டிரான்ஸ்பார்கள்: புதிதாக மின் விநியோக ட்ரான்ஸ்பார்கள் வசதிகளை செய்து தர வேண்டுமெனில் 90 நாட்கள் வரை ஆகும்.. ஒருவேளை, மின்சார வாரியம் குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பை தரவில்லை, கூடுதல் லோடு கிடைக்கவில்லை, தற்காலிக மின் விநியோக ஏற்பாடு தரவில்லை, சர்வீஸ் கனெக்ஷன் மாற்றம் செய்யவில்லை, மின் கட்டனத்தில் மாற்றத்தில் சிக்கல் போன்ற விஷயங்களில் உரிய இழப்பீடு பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 7 நாட்களை தாண்டினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரப்போவதாகவும் அப்போதே அறிவித்திருந்தது.
புதிய அறிவிப்பு: இந்நிலையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. அதன்படி, மின் இணைப்பு பெற வேண்டுமானால், மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதை பிரிவு அலுவலகத்தினர் பரிசீலித்து இணைப்பு வழங்குவார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்னொரு கோரிக்கை எழுந்துள்ளது.. வழக்கமாக, புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட வேண்டுமானால் 30 நாட்களும், கரண்ட் கம்பம் நிறுவுவதற்கு 60 நாட்களும், டிரான்ஸ்பார்மர் நிறுவுவதற்கு 90 நாட்களும் கால அவகாசம் உள்ளது. ஆனால் குறித்த காலத்தில் இணைப்பு வழங்கப்படுவதில்லை என்ற அதிருப்தி கிளம்பி உள்ளது.
கோரிக்கை: அதுமட்டுமல்ல, புதிய மின் இணைப்பு கேட்டு மாநிலம் முழுதும் உள்ள அலுவலகங்களில் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக சொல்கிறார்கள். அடுத்த மாதம் பருவமழை காலம் துவங்குவதால் அதற்குள் புதிய இணைப்புகளை வழங்க வேண்டும என்றும் கோரிக்கை வலுவாகி உள்ளது. இந்த கோரிக்கையை தமிழக அரசு விரைந்து பரிசீலிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
புதிய இணப்புகளை பெற ஆவணங்கள்: சொத்து வரி ரசீது, விற்பனை ஒப்பந்தம் போன்ற அந்த சொத்து விண்ணப்பதாரருடையது தான் என்பதற்கான சான்று ஆதாரத்தின் நகல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டின் உரிமையாளராக இல்லை என்றால், வீட்டின் உரிமையாளரிடமிருந்து படிவம் 5 போன்று பெறப்பட்ட கடிதம் அல்லது விண்ணப்பதாரர் அந்த வீட்டில்தான் வசிக்கிறார் என்பதற்கான சான்றான படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும்...
ஆவணங்கள்: விண்ணப்பதாருக்கு 112KW அதிகமாக மின் அளவு தேவை என்றால், அவர்கள் அதற்குரிய படிவங்களை ஸ்கேன் செய்து அதன் பிடிஎஃப்-ஐ சமர்ப்பிக்க வேண்டும். TANGEDCO இணையதளத்திற்குச் சென்று விண்ணபிக்க வேண்டும்.
-
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications