அடடே இப்படி ஒரு விஷயம் இருக்கா.. புதிதாக வெளியிடப்பட்ட ரூ.75 காயினை பெறுவது எப்படி? இதை படிங்க
சென்னை: புதிதாக வெளியிடப்பட்டு உள்ள 75 ரூபாய் காயினை பெறுவது எப்படி என்பது தொடர்பாக விவரங்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக அவ்வப்போது நினைவு நாணயம் வெளியிடப்படுவது வழக்கம். . இந்தியாவில் கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நினைவு நாணயங்கள் உள்ளன.
பல்வேறு காரணங்களுக்காக இதற்கு முன் பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நினைவு நாணயங்கள் பொதுவாக புதிய டிசைனில், வேறு மாதிரி இருக்கும். பல தலைவர்களை புகழ்ந்தும், பாராட்டியும் கூட நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

வேறுபாடு:
மற்ற நாணயங்களுடன் வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்று பல மாற்றங்கள் இது போன்ற நினைவு நாணயங்களில் செய்யப்பட்டு இருக்கும். ஒரு சிறப்பு நிகழ்வு, முக்கிய தலைவர், தனிநபர் அல்லது நினைவுச்சின்னத்தை கொண்டாடுவதற்காக நினைவு நாணயம் வெளியிடப்படுவது வழக்கம்
இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் 75 ரூபாய் சிறப்பு காயின் வெளியிடப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காக இதற்கு கருப்பு நிறம் கொடுத்து உள்ளனர்.
இந்த நாணயம் 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவில் இருக்கும். அதன் விளிம்புகளில் 200 சீர்வரிசைகளாக கோடுகளை கொண்டிருக்கும். 35 கிராம் எடை கொண்ட நாணயம் ஆகும் இது. இதில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவை உள்ளன. உலோகங்கள் கலந்த அலாய் காயின் ஆகும் இது.
கிடைக்குமா? :
ஆனால் இதை காயின்கள் தயாரிக்கும் ஆர்பிஐ ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் வாங்க முடியும். அதற்கும் கூட சில விதிகள் உள்ளன. டீலர்கள் மூலம் தொடர்பு கொண்டு நேரடியாக காயின்கள் தயாரிக்கும் ஆர்பிஐ ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் வாங்க முடியும்.
ஆனால் இதை காயின்கள் தயாரிக்கும் ஆர்பிஐ ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் வாங்க முடியும். அதற்கும்கூடக் சில விதிகள் உள்ளன. டீலர்கள் மூலம் தொடர்பு கொண்டு நேரடியாக காயின்கள் தயாரிக்கும் ஆர்பிஐ ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் வாங்க முடியும்.
பெரும்பாலும் 3 மாதங்களுக்கு முன் இதற்காக ஆர்டர் கொடுக்க வேண்டும். அதிகபட்சம் 6 மாதங்களுக்கு முன் இது போன்ற ஆர்டர்களை கொடுத்தால் நினைவு நாணயங்கள் கிடைக்கும். காயின்கள் தயாரிக்கும் ஆர்பிஐ ஒப்பந்ததாரர் நிறுவனங்களில் நேரடியாக சென்று கொடுக்க முடியும். பொதுவாக இவர்கள் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுப்பார்கள். அதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட தேதிகளில் சென்று காயின்களை வாங்க ஆர்டர் கொடுக்க வேண்டும்.
காயின் மதிப்பை விட கூடுதல் பணம் கொடுக்க வேண்டி இருக்கும். காயின் சேகரிக்கும் நபர்கள் இது போன்ற காயின்களை வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம்.

நாடாளுமன்ற திறப்பு விழா:
டெல்லியில் ரூ.21,000 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய செயலகமான சென்ட்ரல் விஸ்டா திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வு தொடங்கி சற்று முன் நடந்து முடிந்தது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் நிறுவப்பட்டது.
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்றனர். 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்தனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உரைகள் வாசிக்கப்படும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications