உங்க வீட்டில் இந்த வாகனம் இருக்கா? அப்போ கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்காது.. இதை படிங்க
சென்னை: கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக தகுதியான குடும்ப தலைவிகள் வீட்டில் என்ன மாதிரியான வாகனங்கள் இருக்க கூடாது என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என்பது. திமுகவின் தேர்தல் வெற்றிக்கு பின் இருந்த பல்வேறு வாக்குறுதிகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். நேற்று இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த திட்டம் தேசிய அளவில் ஹிட் அடித்து உள்ளது. தேசிய அளவில் ஹிட் என்றால் மற்ற மாநிலங்களில் கூட இது தேர்தல் வாக்குறுதிகளாக மாறியது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.
யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காது?:
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்
ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்
சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்
முக்கியமான கட்டுப்பாடு: இந்த திட்டத்தின் கீழ் பயன் பெரும் பெண்களுக்கு முக்கியமான சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது வீட்டில் வாகனங்கள் இருப்பது.
உங்கள் வீட்டில் நான்கு சக்கர வாகனங்கள் இருந்தால் இந்த பணம் உங்களுக்கு கிடைக்காது. அதாவது கார், ஜீப், டிராக்டர் போன்ற வாகனங்கள் இருந்தால் இந்த பணம் கிடைக்காது. ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் இருந்தால் பிரச்சனை இல்லை.
குடும்ப தலைவிகள்: இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான குடும்ப தலைவிகள் யார் யார்.. குடும்ப தலைவிகள் என்ற தகுதி பெறுபவர்கள் யார் என்ற விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
* குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
* ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பிக்கலாம்.
* குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிட்டுள்ள பெண்
குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
* குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பத் தலைவரின் மனைவி, குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
*திருமணம் ஆகாத தனித்த பெண்கள்; கைம்பெண்கள் & திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்ப தலைவிகளாகக் கருதப்படுவர்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதேபோல் திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா?












Click it and Unblock the Notifications