பெசன்ட் நகர் பீச்சில் கரை ஒதுங்கிச்சே நீல நிற உயிரினம்! கரைக்கு வந்துச்சுன்னா! ஆச்சரிய தகவல்கள்
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலின் போது கரை ஒதுங்கிய ப்ளூ டிராகன்கள் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.
ப்ளூ டிராகன் எனப்படும் நீல நிற டால்பின்கள் கடல் நத்தை இனத்தை சேர்ந்தவை. பொதுவாக நத்தைகள் ஜெல்லி மீன்களை உண்பவை. இந்த நீல நிற டால்பின்கள் விஷத்தன்மை கொண்டவை. இதன் கொடுக்கு மூலம் கொட்டினால் கடும் வலி ஏற்படும். இந்த மீன்களை தொட்டாலே உடலில் அரிப்பு ஏற்படும்.

எரிச்சலும் வாந்தியும் தலைவலியும் ஏற்படும். இதனால் இவை சொரி மீன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் உடலின் மேற்புறம் நீல நிறத்திலும் அதன் அடிபாகம் பளபளக்கும் சில்வர் நிறத்தில் இருக்கும். இந்த வகை மீன்கள் தற்காப்புக்காக உருவத்தை மாற்றும் திறன் கொண்டவை.
ஆழ்கடல் பகுதியில்தான் இவை அதிகம் வசிக்கும். நீரின் மேற்புறத்தில் நீல நிறத்திலும் அடிபுறத்தில் சில்வர் நிறத்திலும் காட்சியளிக்கும். இந்த டிராகன்களால் பகல் நேர வெப்பத்தை தாங்க முடியாது. இதனால் அவை ஆழ்கடலுக்கு சென்றுவிடும். அப்படிப்பட்ட சூழலில் இந்த டிராகன்கள் கரைகளில் உயிருடனும் இறந்தும் கரை ஒதுங்குகின்றன.
இந்த நிகழ்வு அசாதாரணமாக பார்க்கப்படுகிறது. இரவு நேரங்களில் கரைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. அது போல் புயல், கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கும். இவை சென்னையில் மிக்ஜாம் புயலின் போது கரை ஒதுங்கியதாம். அது போல் எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போதும் இவை கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவை பெசன்ட் நகர் கடற்கரையில் கரை ஒதுங்கியதால் அங்கு செல்வோர் அந்த அழகான நிறத்தில் உயிரினத்தை பார்த்தால் உடனே கையை வைத்துவிட வேண்டாம். குறிப்பாக குழந்தைகள் யாரும் தொட்டுவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியமானதாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த உயிரினம் குறித்து கூடுதல் தகவல்களை பார்ப்போம். அதாவது இவை அட்லாண்டிக், பசிபிக், இந்திய கடலோரத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த உயிரினங்கள் எத்தனை இருக்கின்றன என்பது தெரியவில்லை. இவை மிகவும் சிறியதாக இருப்பதால் இவற்றின் எண்ணிக்கையை எண்ண முடியவில்லை.
இந்த டிராகன்கள் 1.2 இன்ச் வரை வளரும். அதன் அளவை போல் சிறிய அளவில் உள்ள கடல் உயிரினங்களை உண்ணும். அதன் பற்கள் கத்தி போல் கூர்மையாக இருப்பதால் அவை உயிரினங்களை உண்ணும். ப்ளூ டிராகன்கள் பந்து போல் சுருண்டிக் கொள்ளும் திறன் கொண்டவை. அவை வேட்டைக்கார விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும்.
மேலும் உருண்டபடியே அலைகளில் அடித்து வரப்பட்டு மணல் பகுதிக்கு வரும். அங்கு வந்தால் இதன் கொடுக்கு ஆக்டிவ்வாக இருக்கும். இது இறந்தாலும் இதன் கொடுக்கில் விஷம் இருக்கும். இந்த நீல டிராகன்களுக்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். இரு ப்ளூ டிராகன்கள் உறவுக் கொள்ளும் போது அதன் நீளமான சுழன்று இருக்கும் எஸ் வடிவ ஆண் பிறப்புறுப்பை கொண்டு ஜாக்கிரதையாக உறவு கொள்ளும்.
இவை 20 முட்டைகளை இடும். இந்த ப்ளூ டிராகன்கள் தற்போதுதான் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளன. இவை கடல் வெப்பமாதலால் வெளியே வருகின்றன. 2017 ஆம் ஆண்டு தைவானில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டில் டெக்சாஸில், 2021 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலும் கண்டெடுக்கப்பட்டன. ப்ளூ டிராகரன்கள் தங்களுக்கு ஆபத்து என்றால் கொடுக்கால் கொட்ட தயங்காது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications