தமிழக அரசியல் மேடைகளில் மட்டுமே இருக்கும் 'துண்டு போடும்' கலாசாரத்தின் பின்னணியில் ஒரு சரித்திரம்!
சென்னை: தோளில் துண்டு அணிவது, சால்வை அணிவிப்பது என்பது எல்லாம் பத்து பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாதது; இது எல்லாம் திராவிட கலாசாரம் என்கிற "ஒவ்வாமை" குரல்கள் ஒருசேர ஒலித்து கொண்டிருப்பது புதிய விவாதங்களை எழுப்பி நிற்கிறது.
தமிழர் வாழ்வியல் உடைகளில் துண்டு தவிர்க்க முடியாத ஒன்றுதான் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அந்த துண்டுதான் சனாதனம் கற்பித்த ஜாதியத்தின் அடிப்படையிலான அடக்குமுறைகளின் வடிவமாக இருந்தும் வந்தது. உயர்ஜாதி என சொல்லிக் கொள்வோரை பார்த்த உடன் பிற ஜாதியினர் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு குனிந்து பவ்யமாக கும்புடுறேன் சாமி என இழிவாக கூனி நிற்பது; இன்னும் சில ஜாதியினர் இடுப்பு துண்டை கக்கத்தில் மறைத்து வைத்துக் கொண்டு 'உங்க அடிமை சாமீ' என கேவலமாக பணிந்து கிடப்பது என்கிற பேரவலம் சாமானியர்களுக்கும் மட்டுமல்ல.. எந்த துறையில் கோலோச்சினாலும் அவர்களுக்கும் அப்படித்தான் இந்த நிலைமை இருந்தது.

இந்த பேரவலத்தின் மீதான பெருங்கோபத்தின் வழியேதான் தோளில் துண்டு போடுவது, சால்வை அணிவிப்பது என்கிற 'வழக்க'த்தை உருவாக்கியது திராவிடர் பேரியக்கம். இந்த பழக்கம் எப்படி உருவானது என்பதற்கு ஒரு சரித்திரமே இருக்கிறது என்பது நாம் அறிவோமா? என்பதும் தெரியாது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இதனை ஒருமுறை விரிவாகவே தரவுகளுடன் விவரித்திருந்தார். கொளத்தூர் மணியின் பேச்சு இதுதான்.. " ஒரு திருமண ஊர்வலத்தின் போது நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு செல்கிறார்கள். ஒரு பெரிய புகழ்பெற்ற இசை கலைஞர். அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் இசையில் ஆர்வம் உடையவர். அந்த இசையை கேட்க சென்று விட்டார். அந்த நாதஸ்வரக் கலைஞர் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டி இருக்கிறார். வியர்வையைத் துடைப்பதற்கு தோளில் போட்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் நாதஸ்வரக் கலைஞர் தோளில் போட்டிருந்த துண்டை எடுக்க சொல்கிறார். நீ சின்ன ஜாதிக்காரன் நீ எதற்கு துண்டை தோளில் போடுகிறாய், அதை எடு என்கிறார். இசைக் கலைஞர்களை அப்படி மதித்து கொண்டிருந்த காலம்.
அவர் அங்கவஸ்திரத்தை இடுப்பில் தான் கட்டியிருக்கிறேன், இது வியர்வையை துடைப்பதற்காகத்தான் என்று சொல்கிறார். அதைக் கூட போடக்கூடாது என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் சொல்கிறார். உடனே அழகிரி தோளில் இருந்து துண்டை எடுக்காதே என்று சொல்கிறார். இல்லையேல் நீ வாசிக்காதே நிறுத்து என்று சொல்லிவிட்டு பெரியாரிடம் ஓடி வருகிறார். பெரியாரிடம் பிரச்சனையை விளக்கிப் பேசுகிறார் அந்த நாதஸ்வர கலைஞர். அப்பொழுதே 400 ரூபாய் சம்பளம் பெறக்கூடிய புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர். உடனே பெரியார் நாம் பணம் கொடுத்து விடலாம் உடனே நிறுத்து என்று சொல் என்று கூறி விடுகிறார். அதற்குப் பிறகு அந்த நாதஸ்வரக் கலைஞரை பெரியாரிடம் கூட்டி வருகிறார் அழகிரி. பிறகு திருமண வீட்டினர் பெரியாரிடம் வந்து கெஞ்சி சமாதானப்படுத்திய பிறகு தோளில் துண்டை போட்டுக்கொள்ள ஒப்புக் கொண்டனர். அப்புறம் பெரியார் அந்த அங்க வஸ்திரத்தை எடுத்து தோளில் போடு அதை ஏன் இடுப்பில் கட்டிக் கொண்டிருக்கிறாய் என்று கூறினார்.
சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவர் பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் தோளில் துண்டையும் போட்டுக் கொண்டுதான் நாதஸ்வரம் வாசிப்பார். ஒரு நாளும் இவை இல்லாமல் வாசிக்க மாட்டார். அதற்குப் பின்னால்தான் சுயமரியாதை இயக்கக் கூட்டங்கள் நடக்கிற ஊர்களில் எல்லாம் உள்ளூர் தோழர்களை அழைத்து, யார் யாரெல்லாம் உள்ளூரில் தோளில் துண்டு போடாமல் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் மேடையில் ஏற்றி அமர வைத்து, இவருக்கு துண்டை அணிவிக்கிறேன் என்று கூறி துண்டை அணிவிக்கிறார்கள். இதுதான் தொடக்கம்" (நன்றி கீற்று தளம்).. இப்படித்தான் தோளில் துண்டு போடுதல், மேடையில் சால்வை அணிவித்தல் பழக்கம் உருவானது. மனித குலத்தில் சுயமரியாதை எனும் விடுதலை உணர்வின் வெளிப்பாடுதான் இந்த சால்வை அணிவித்தலும் துண்டு போடுதலும். இன்றைக்கு படோபடமாகத் தெரியலாம்.. இன்றைக்கு 'வெறுப்புவாதி'களுக்கு ஒவ்வாமையாகத் தெரியலாம்.. ஆனால் இது திராவிடர் பேரியக்கம் நிலைநாட்டிய புரட்சி. இந்த வழக்கம் ஒவ்வாமை என்பது 'அடிமைத்தனமாக' மரத்துப் போன மண்டைகளுக்குதான்.. விடுதலையை அனுபவிக்கும் மனிதர்களுக்கு இது மாபெரும் புரட்சி.
இதனைத் தொடர்ந்துதான் அண்ணா கைத்தறி துணி விற்கிறார்.. கைத்தறி துண்டுகளை மேடைகளை அணிவிக்கின்றனர் என்கிற சரித்திரம் எல்லாம் பின் வருகிறது.. திராவிடர் பேரியக்கம் ஒரு அறிவியக்கம் என்பதால் சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்களை கொடுங்களேன் என அடுத்த பாய்ச்சலுக்கும் போனது. துண்டு, சால்வையை உதாசீனம் செய்வது என்பது வேறு; சால்வையை புத்தகங்களுடன் சமன் செய்வது என்பது வேறு என்பதையும் நினைவில் கொள்ளத்தான் வேண்டும்.
-
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications