Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபிளைட்ல வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? தீயாய் பரவும் ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் ரோகிணி தியேட்டர் உரிமையாளரும் சங்க செயலாளருமான பன்னீர் செல்வம் யார் என்பது குறித்தும் அவர் கடந்த காலங்களில் பேசிய சம்பவங்களும் தீயாய் பரவி வருகிறது.

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவ மக்களை உள்ளே அனுப்ப தியேட்டர் நிர்வாகம் மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்த யுஏ சான்றிதழ் கொண்டது. இந்த சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அனுப்பக் கூடாது. அதனால்தான் ஊழியர் அவர்களை அனுமதிக்கவில்லை. மற்றபடி அவர்கள் நரிக்குறவர்கள் என்பதற்காக உள்ளே அனுமதிக்கவில்லை என்பது தவறு என்றார்.

பன்னீர் செல்வம்

பன்னீர் செல்வம்

இதையடுத்து பன்னீர் செல்வம் யார் என்பதையும் ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள். அந்த வகையில் பன்னீர் செல்வம் இதற்கு முன்னர் நிறைய கருத்துகளை பேசியிருக்கிறார். அந்த வகையில் அவர் கொரோனா காலத்தில் பேசிய பேச்சுகள் மீண்டும் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

2020 ஆம் ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

இந்த நிலையில் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்துகளும் முடங்கியது. கொரோனா தாக்கம் லேசாக குறைந்ததும் விமான போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் ஒரு விழாவில் ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசிய போது கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து சிரமமான நிலையில் உள்ளனர். ரூ 1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 திரையரங்குகளை எப்போது திறப்பார்கள்

திரையரங்குகளை எப்போது திறப்பார்கள்

திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்துவிட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத கொரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும். திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். விமானத்தில் அவ்வளவு நெருக்கமாகப் பயணம் செய்யும் போது வராத கொரோனா திரையரங்கில் மட்டும் எப்படி வந்து விடும் என்று நினைக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+