Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன வெங்காயம் விலை மோசமாக உயருது.. சென்னை கோயம்பேட்டில் தக்காளி, உருளைக்கிழங்குக்கு என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் காய்கறிகள் வரத்து குறைவால் அதன் விலை குறைந்துள்ளது. ஆனால், வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு இந்த மூன்றின் விலை மட்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. என்ன காரணம்?

தமிழகத்தை பொறுத்தவரையில், 90 சதவீதம் சின்ன வெங்காயம், 10 சதவீதம் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது... இதில், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிளெல்லாம் சின்ன வெங்காயம் கணிசமாக பயிரிடப்பட்டு வருகிறது.

சின்ன வெங்காயம்: எனினும், பெரிய வெங்காயத்தின் விலை குறைவாகவும், சின்ன வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்தே இருக்கும். ஆனால், சமீப காலமாக, பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.

Small Onion Chennai Koyambedu

தக்காளியை பொறுத்தவரை, பல்வேறு பகுதிகளிலிருந்து தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.. எனினும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தக்காளி லாரிகளில் வந்து இறங்குகின்றன.

உருளைக்கிழங்கு: அதேபோல, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி குறைந்துவிட்டதாம்.. கடுமையான மழை காரணமாக, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது... அதனால், கையிருப்பில் உள்ள உருளை மட்டுமே சந்தைக்கு வருவதாக சொல்கிறார்கள். அதிலும் 2ம், 3ம் தர உருளைக்கிழங்குகள் மட்டுமே கொண்டுவரப்படுகிறதாம். முதல் தரமான உருளைக்கிழங்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன. கையிருப்பிலும் உருளைக்கிழங்கு இல்லை என்பதால், விலை உயர்ந்து வருகிறது..

சென்னை கோயம்பேட்டை எடுத்து கொண்டால், கடந்த ஜுன் மாதம் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு, கடந்த சில தினங்களாக 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில்லரை விலையில் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. எனவே, புதிதாக உருளைக்கிழங்கு நடவு பணி துவங்கியிருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால், உருளை விளைந்து, அறுவடைக்கு வருவதற்கு எப்படியும் 75 முதல், 120 நாட்கள் பிடிக்கும் என்பதால், உருளை விலை குறைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிறார்கள் விவசாயிகள்.

காய்கறிகள்: வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வரும்நிலையில், இப்போதைக்கு மஹாராஷ்டிரா, ஹரியானா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களிலிருந்து வெங்காயம், உருளைகிழங்கு விற்பனைக்கு வருகிறது... இவை கிலோ, 50 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால், மார்க்கெட்டிற்கும், கடைகளுக்கும் நுகர்வோர் வருகையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

வெங்காயம், தக்காளி, உருளைகிழக்கு விலை அதிகரித்து வரும் நிலையில், மற்ற காய்கறிகளின் விலை படிப்படியாக குறைய துவங்கியிருப்பது ஆறுதலான விஷயமாக உள்ளது.. திருவள்ளூர், வேலுார், திண்டுக்கல், நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், காய்கறி சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நம்முடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லாததால், பக்கத்து மாநிலங்களிலிருந்து பலவகை காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

விளைச்சல் குறைவு: விளைச்சல் குறைவு காரணமாக, சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தது.. இப்போது அறுவடை துவங்கிய நிலையில், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், முள்ளங்கி, அவரைக்காய், முருங்கைக்காய், சவ்சவ், நுாக்கல், பாகற்காய், வெள்ளரி உள்ளிட்ட பலவகை காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.. இவை கிலோ, 15 முதல் அதிகபட்சமாக 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன... எனினும், கேரட், பீட்ரூட், சேனைகிழங்கு, கோஸ் போன்றவற்றின் விலையும் சில நாட்களில் இன்னும் குறையும் என்கிறார்கள்.

பூக்களின் விலை: காய்கறி விலையை போலவே பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.. ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை வழக்கத்தைவிட உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஆடி மாதத்தில் தமிழகத்தின் பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துவிடும். இன்றைய நாள் விசேஷமான வெள்ளிக்கிழமை என்பதால், அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+