பாம்புகள் கூடு கட்டி வாழுமா? எந்த இனம் வீடு கட்டி வாழும்?
சென்னை: பாம்புகள் கூடுகட்டி வாழுமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம். பொதுவாக பாம்புகள் கூடுகட்டி அதில் வாழும் உயிரினம் அல்ல!
இதுகுறித்து நமசிவாய் மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: பாம்புகள் பெரும்பாலும் கைவிடப்பட்ட கரையான் புற்றுகள், மரப்பொந்துகள், மரப்பட்டைகளின் பிளவுகள், பாறைகளின் பிளவுகள், நிலத்தில் தரையில் உள்ள பொந்துகள், புதர்கள், மரக்கிளைகள் ஆகியவற்றையே தனது இருப்பிடமாக்கி அவற்றுள் வசிக்கக் கூடியவை.

தண்ணீர் பாம்புகள் தண்ணீரில் வசித்தாலும் அவைகளும் அவ்வப்போது அருகிலுள்ள தரைப் பகுதியில் வந்து தங்குகின்றன.
ஆனால், இராஜநாகம் மட்டுமே இதற்கு விதிவிலக்கானது. சுமார் 16 அடி நீளம் வரை வளரும் இது அதிகமாக அளவு நஞ்சை தன் நஞ்சுப்பையில் தேக்கி வைத்திருக்கும் விஷப்பாம்பினமாகும். இந்தியாவில் இது மேற்கு தொடர்ச்சி மலை, வட இந்திய மலைக்காடுகள், அஸ்ஸாம், கோவா , அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சுமார் 6000 அடி உயரமுள்ள மழைக் காடுகளிலும், தேயிலை எஸ்டேட்களிலும் காணப்படுகிறது.

பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளிலும் இது காணப்படுகிறது. பெண் இராஜநாகம் இணை சேர்ந்த பின்னர் முட்டையிடும் காலத்தில் அடர்ந்த மூங்கில் காடுகளில் வந்து தனது வாலினால் காய்ந்த இலைகளை கூட்டி சுமார் ஒரு அடிக்கும் உயரமான கூம்பு வடிவ கூடு அமைக்கும். இதனடியில் சுமார் 30 முட்டைகள் வரை இட்டு, மேற்பகுதியில் இரண்டு மாதங்கள் வரை இரை ஏதுமில்லாமல் தங்கி இருந்து தனது முட்டைகளை அடைகாக்கும்.

முட்டைகள் பொரித்து குட்டிகள் வெளிவந்ததும் பெண்பாம்பு அதனை விட்டு அகன்று விடும். உலகின் கூடுகட்டி வாழும் ஒரேயொரு பாம்பு இனம் இராஜநாகம் மட்டுமே ! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications