ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? தெற்கு ஒடிஷா மாவட்டங்கள் அத்தனையும் ’சென்னை மாகாணத்தின்’ பகுதிகள் தெரியுமா?
சென்னை: ஒடிஷாவை ஒரு தமிழர் ஆட்சி செய்யவிடலாமா? ஒடிஷாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா? என ஒடிஷா சட்டசபை தேர்தல் களத்தில் இடைவிடாமல் கூச்சலிடும் பாஜக தலைவர்களுக்கு ஒடிஷாவின் மாவட்டங்கள் ஒரு காலத்தில் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்த வரலாறு தெரியுமா? என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றாக ஒடிஷா இல்லாமல் இருக்கலாம். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுடன் பல்வேறு வகைகளில் மிக நெருக்கமானது ஒடிஷாதான். எல்லைகளால் மட்டுமல்ல.. மக்களாலும் நெருக்கமானது ஒடிஷாதான்.

நாடு விடுதலை அடைந்த போது மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத நிலையில் மாகாணங்கள் இருந்தன. அப்போதைய சென்னை மாகாணம் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அனைத்து அண்டை மாநிலங்களின் பெரும் நிலப்பரப்பு சென்னை மாகாணத்தில்தான் இருந்தன. வடகேரளாவின் மலபார் பிராந்தியமும் லட்சத்தீவுகள் நிலமும் சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்தன. இன்றைக்கும் ஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தில் பயணித்தால் 1950-களில் சென்னை மாகாணத்தின் ஒரு அங்கமாக இருந்த பெயர் பலகைகளைப் பார்க்க முடியும். ஆம் ஒடிஷாவின் தென் பகுதி மாவட்டங்கள் பெரும்பாலானவை ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்தன.

அதாவது ஒடிஷாவின் தெற்கு பதியில் உள்ள ஆந்திராவை ஒட்டிய கஞ்சம், கஜபதி, ராயபடா, கோரபுட், மல்காங்கிரி மாவட்டங்கள் சென்னை மாகாணத்தின் அங்கமாக இருந்தவைதான். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்குப் பின்னரே இன்றைய ஒடிஷாவுக்கு சொந்தமானவை இந்த நிலப் பகுதி.
அவ்வளவு ஏன்? தென் பகுதி ஒடிஷா மாவட்டங்களில் பெரும்பாலானோர் பூர்வகுடிகள். ராயகடா, கோரபுட், மல்காங்கிரி மலைகளில் ஆந்திரா எல்லையுடன் பெரும் எண்ணிக்கையில் ஆதி பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கோண்டுகள், கொதவாக்கள் என பல்வேறு பிரிவினராக இருக்கின்றனர். திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்றால் பேசும் மொழியானது பழந் தமிழை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் பேசுவது ஒரியா மொழி அல்ல. இந்த பழங்குடிகள் பேசுவதை உற்று கேட்டாலே அதன் மொழி புரியும். இந்த பழங்குடிகளின் ஊர் பெயர்களை கவனித்து பார்த்தாலே கார்குழலி தொடங்கி அருந்தமிழில் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படை வரலாறு தெரியாமல்தான் சிலர், அய்யோ ஒடிஷாவை தமிழர் ஆட்சி செய்வதா? என ஓலமிட்டு அலறுவதாக சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications