டிரம்ப்பால்.. உலகின் பல முக்கிய நாடுகளின் மார்க்கெட்டுகள் சரிந்தும்! மலைபோல சரியாமல் நின்ற ஒரு நாடு
சென்னை: உலக அளவில் அடுத்தடுத்து பல நாடுகளின் சந்தைகள் சரிவு அடைந்து உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உலக மார்க்கெட் கதறி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போரால் மார்க்கெட் சரிவு உச்சம் அடைந்து உள்ளது.

ஹாங்காங்: 13.2% 🔻
தைவான்: 9.7%🔻
ஜப்பான்: 8.3%🔻
சிங்கப்பூர்: 7.4%🔻
சீனா: 7.3%🔻
இத்தாலி: 6.9%🔻
ஸ்வீடன்: 6.2%🔻
நெதர்லாந்து: 6.1%🔻
ஆஸ்திரேலியா: 6.1%🔻
பிரான்ஸ்: 6%🔻
ஸ்பெயின்: 5.7%🔻
ஜெர்மனி: 5.6%🔻
சுவிட்சர்லாந்து: 5.5%🔻
UK: 4.6%🔻
பிலிப்பைன்ஸ்: 4.3%🔻
மலேசியா: 4%🔻
இந்தியா: 3.8%🔻
ரஷ்யா: 3.1%🔻
துருக்கி: 2.5%🔻
சவுதி: 0.5% 📈
இன்று காலை மட்டும் இப்படி மேற்கண்ட நாடுகள் எல்லாமே சரிவை சந்தித்துள்ளன. ஆனால் சவுதி மட்டும் 0.5% முன்னேற்றம் அடைந்து உள்ளது. நேற்று கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதனால் அதன் விற்பனை அதிகரித்தது. இதன் காரணமாகவும் சவுதி ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைவதாலும் 0.5% அளவிற்கு அங்கே மார்க்கெட் வளர்ச்சி அடைந்து உள்ளது.
பதிலடி வரிகள் என்றால் என்ன?
முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிரிப்டோ மார்க்கெட் சரிவு
மொத்த கிரிப்டோ மார்க்கெட் கேப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிப்டோ சந்தைக் குறியீடு, $2.5 டிரில்லியனில் இருந்து $2.38 டிரில்லியனாக 4.8% சரிந்தது.. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வரை சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது.
1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 70 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது. உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின். இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
ஏற்கனவே இந்திய மார்க்கெட் சரிவு
இன்று இந்திய பங்கு சந்தை கடுமையான சரிவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.
81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications