பேங்க் போறீங்களா? 3 நாட்களுக்கு வங்கி விடுமுறை.. எங்கேன்னு பாருங்க.. மார்ச் மாத லிஸ்ட் இதுதான்
சென்னை: வங்கி விடுமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவல் வெளியிட்டிருந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்யும் இடமாக வங்கிகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனைகளுக்காகவும், வங்கிகள் நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

வங்கிகள்: அதனால்தான், வங்கி விடுமுறைகளை நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டியிருக்கிறது.. வங்கிகள் விடுமுறையில் சிலவற்றை மட்டும் அரசாங்கம் நிர்ணயித்து வருகிறது. அதேபோல, இந்தியா முழுவதுமுள்ள வங்கிகள் தேசிய விடுமுறை நாட்களில் மூடப்படுவது வழக்கம்.
அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் ஆர்பிஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதற்கான விடுமுறை பட்டியலை வெளியிடும்..
விடுமுறைகள்: தேசிய விடுமுறைகள், பண்டிகைகளை தவிர்த்து வார இறுதி நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது தெரிந்த விஷயம்தான் என்றாலும், வங்கிகளின் விடுமுறை நாட்களை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதன் மூலம், அவர்கள் அந்த நாட்களில் வங்கிக்கு சென்று வீணாக அலைச்சல் தவிர்க்கப்படும்.. நேரமும் மிச்சப்படுத்தப்படும்.
வாடிக்கையாளர்கள் இதற்கேற்ப தங்கள் நிதி நடவடிக்கைகளை திட்டமிடுவதை உறுதி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலை முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்த மார்ச் மாதத்துக்கான விடுமுறையும் வெளியிடப்பட்டது.. அந்தவகையில், இந்த மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்குமாம்.
புதுவருடம்: இன்றைய தினம் சிவராத்திரி என்பதால், இன்று வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, இன்றைய தினம் மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று மார்ச் 8 வெள்ளிக்கிழமையன்று வங்கிகள் மூடப்படுகிறது.. அதைத்தொடர்ந்து நாளை இரண்டாவது சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிறும் விடுமுறையாகும்..
குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, சண்டீகர், உத்தராகண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஜம்மு - ஸ்ரீநகர், கேரளா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்றிலிருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, மார்ச் மாதத்தில் மற்ற வங்கி விடுமுறைகள் இவைகள்தான். நோட் பண்ணிக்குங்க மக்களே:
- 12 மார்ச் 2024 செவ்வாய்க்கிழமை - ரமலான் ஆரம்பம் தடைசெய்யப்பட்ட விடுப்பு
- 17 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - வாரந்தோறும் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை
- 20 மார்ச் 2024 புதன்கிழமை - மார்ச் உத்தராயண அனுசரிப்பு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்
- 22 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை - பீகார் நாள்
- 23 மார்ச் 2024 சனிக்கிழமை - பகத்சிங் தியாகி தினம் பல மாநிலங்களில் விடுமுறை
- 24 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - ஹோலிகா தஹான் வர்த்தமானி விடுமுற
- 25 மார்ச் 2024 திங்கட்கிழமை - ஹோலி/டோலா யாத்ரா வர்த்தமானி விடுமுறை
- 26 மார்ச் 2024 செவ்வாய்க்கிழமை - யாசங் மணிப்பூர்
- 28 மார்ச் 2024 வியாழக்கிழமை - மாண்டி வியாழன் அனுசரிப்பு தடைசெய்யப்பட்ட விடுப்பு
- 29 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி வர்த்தமானி விடுமுறை
- 30 மார்ச் 2024 சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை நாடு தழுவிய விடுமுறை
- 31 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை - ஈஸ்டர் தினம் தடைசெய்யப்பட்ட விடுப்பு
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications