விட்டுட்டீங்கன்னா ஆதார் கார்டு செல்லாததாகிவிடும்! இன்று முதல் மாற போகும் 6 மேஜர் மாற்றங்கள்!
டெல்லி: செப்டம்பர் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான மாற்றங்கள் நிகழலாம் என சொல்லப்படுகிறது. இவை எல்லாம் இன்று முதல் நடக்கும் என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சில விதிகளில் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்த ஆகஸ்ட் மாதம் முதலே இந்த மாற்றங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டுதான் இருந்தன. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சில மாற்றங்களை காண போகிறோம்.

இதில் எல்பிஜி கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்டும் இடம் பெறும். அது போல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான சிறப்பு அறிவிப்புகள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றி வருகிறது. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது போல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியும் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். அது போல் இரண்டாவது மாற்றமாக விமான எரிபொருளின் விலைகளையும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
போலி அழைப்புகள், போலி செய்திகள் கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடுமையான வழிகாட்டுதலை டிராய் வெளியிட்டுள்ளது. அதன் படி பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்டு 140 என தொடங்கும் மொபைல் எண்களுக்கான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், வணிக செய்திகளை அனுப்ப ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று முதல் எச்டிஎஃப்சி வங்கி பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும்.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ஆதார் தொடர்பான சில விஷயங்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியாது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு, ஆதாரை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு ஜூன் 14 ஆம் தேதி வரை புதுப்பிக்கும் கட்டணம் இருந்த நிலையில் அது செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இன்று (செப்டம்பர் 1) முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. எனவே 3 சதவீதம் உயர்த்தினால் அது 53 சதவீதமாக உயரும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications