கிராம நத்தம், மேய்க்கால் நிலங்களுக்கு இடையே வித்தியாசம் என்ன தெரியுமா? எதற்கு பட்டா கிடைக்கும்
சென்னை: தமிழகத்தில் நிலங்களை நஞ்சை, புஞ்சை, நத்தம் மற்றும் புறம்போக்கு எனப் பல பிரிவுகளாக அரசு வகைப்படுத்தியுள்ளது. இதில் தரிசு நிலங்கள், கடற்கரை, சாலைகள், மயானங்கள் மற்றும் நீர்நிலைகள் எனப் புறம்போக்கு நிலங்களிலேயே எத்தனையோ உட்பிரிவுகள் உள்ளன. ஆனால், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தோடும், கால்நடைகளின் பசியோடும் நேரடியாகத் தொடர்புடைய ஒரு முக்கிய நில வகைதான் 'மேய்க்கால் புறம்போக்கு'. இந்த நிலத்தின் அசல் பயன்பாடு என்ன, இதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
கிராமத்தில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் தீவனத் தேவைகளுக்காகவும், அவற்றின் சுதந்திரமான நடமாட்டத்திற்காகவும் அரசாங்கத்தால் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட நிலமே மேய்க்கால் புறம்போக்கு அல்லது மேய்ச்சல் நிலம் ஆகும்.

கிராம நத்தம் நிலம்
பழங்கால சங்க இலக்கியங்களில் முல்லைத் திணை என்று வர்ணிக்கப்பட்ட காடும் காடு சார்ந்த நில அமைப்பிற்குள் இது அடங்கும். இந்த நிலங்களில் குடைவேல், கருவேலம், தொரட்டி, காரை மற்றும் பனை மரங்கள் இயற்கையாகவே வளர்ந்து கால்நடைகளுக்குத் தேவையான தழைகளையும், நிழலையும் தடையின்றி வழங்குகின்றன.
இயற்கைச் சுழற்சியிலும் இந்த நிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. பொதுவாக மழைக்காலங்களில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் இந்த நிலங்கள், கோடைக் காலங்களில் வறண்டு காணப்படும். இந்த இடங்களில் மேயும் கால்நடைகளின் கழிவுகள் அங்கேயே மட்கி, பிற்காலத்தில் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்குச் சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுகின்றன.
ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு
இதனால் கிராமப்புறங்களில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றோடொன்று இணைந்து செழிக்க இந்த மேய்ச்சல் நிலங்கள் பெரும் அடித்தளமாக விளங்குகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்குத் தனிநபர்கள் யாராவது பட்டா கோர முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இந்தியச் சட்டப்படி, சாலைகள், மயானங்கள் மற்றும் நீர்நிலைகளைப் போலவே மேய்க்கால் நிலங்களும் 'ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு' என்ற பொதுப் பயன்பாட்டுப் பிரிவின் கீழ் வருகின்றன.
அதனால் இந்த நிலங்களை எந்தவொரு தனிநபரும் விலை கொடுத்து வாங்கவோ, விற்கவோ முடியாது. அதேபோல, இந்த நிலங்களுக்குத் தனிநபர் பெயரில் அரசாங்கத்திடம் இருந்து எக்காரணம் கொண்டும் பட்டா கோர சட்டத்தில் இடமே இல்லை. முழுக்க முழுக்கப் பொதுப் பயன்பாட்டிற்கும், கால்நடைகளுக்கும் மட்டுமே இது சொந்தமானது.
மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள்
ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் நகரங்களை ஒட்டிய பகுதிகளிலும் இத்தகைய மேய்ச்சல் நிலங்கள் சுயநலப் போக்கோடு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
மாடுகள் மேய்வதற்காக ஒதுக்கப்பட்ட பரந்த வெளிகளில் வீடுகளையும், வணிகக் கடைகளையும் கட்டிக் கொண்டு சிலர் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர். கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் கால்நடை வளர்ப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றால், நிலங்களின் வகையறிந்து மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை நாம் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்..
எனவே, கிராமப்புறங்களிலோ அல்லது நகரத்தை ஒட்டிய பகுதிகளிலோ குறைந்த விலைக்கு நிலம் கிடைக்கிறது என்று அவசரப்பட்டு எந்த ஒரு இடத்தையும் பொதுமக்கள் வாங்கிவிட வேண்டாம். வாங்கும் நிலத்தின் அசல் தன்மையை அறிய, கிராம நிர்வாக அலுவலர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி 'அ ' பதிவேடு மற்றும் எஃப்.எம்.பி (FMB) வரைபடத்தைச் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.












Click it and Unblock the Notifications