கார்டியாக் அரெஸ்ட் Vs ஹார்ட் அட்டாக் இடையேயான வித்தியாசம் என்ன? அந்த பொன்னான 5 நிமிடம்.. டாக்டர் தீபா
சென்னை: கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் மாரடைப்புக்கும் ஹார்ட் அட்டாக்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையின் கைநுட்பத் துறை நிபுணர் டாக்டர் ஒய். தீபா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், மாரடைப்புக்கும் ஹார்ட் அட்டாக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மாரடைப்பு (cardiac arrest) என்பது மிகவும் அவசரநிலையாகும். அதாவது இதய துடிப்பு நின்றுவிட்டது என்பது அர்த்தமாகும். உடனே நுரையீரலின் செயல்பாடும் நின்றுவிடும்.
இதனால் ஹார்ட் ரே்ட் , ரெஸ்பிரேட்டரி ரேட் என இரண்டுமே இருக்காது. மூச்சும் இருக்காது, இதயத் துடிப்பும் இருக்காது. உடம்பு ஜில்லுனு ஆகிவிடும். கண்கள் பெரிதாகிவிடும். கண்களின் கருவிழி ஒரே இடத்தில் நின்றால் நோயாளி இறந்துவிட்டார் என்று அர்த்தம். இதய துடிப்பு நின்று உடம்பெல்லாம் ஜில்லுனு ஆகி ஒருவர் மயங்கிவிட்டால், அவருக்கு சிபிஆர் (Cardiac Pulmonary Resuscitation) சிகிச்சை உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்.

இதய துடிப்பு
இவ்வாறு கொடுப்பதன் மூலம் அவரது இதய துடிப்பை கொண்டு வர முடியும். உடனே நம்முடைய நுரையீரலும் செயலாற்றும். அவருடைய நினைவுகளையும் திரும்ப கொண்டு வரமுடியும். இதுதான் இதய துடிப்பு நின்றவர்களுக்கு முதலுதவியாக நாம் செய்ய வேண்டியது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் நமது இடது புறத்தில் நெஞ்சு எலும்பின் கீழ் பகுதியில் நம் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

15 முறை
15 முறை நெஞ்சில் அழுத்தம் கொடுத்தால் இரு முறை வாயோடு வாய் வைத்து சுவாசத்தை கொடுக்க வேண்டும். இப்படி சிபிஆர் சிகிச்சை மூலம் நோயாளியின் இதய செயல்பாட்டை கொண்டு வந்தவுடன் அவருக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகளை கொடுத்தால் நாம் அவர்களுடைய உயிரை காக்கலாம். நெஞ்சில் கை வைத்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் நோயாளியின் இதயத்தின் பம்பிங் திறனை பொருத்தே ஒருவர் பிழைக்க முடியும். இதயத்தின் செயல்பாடு நின்ற 15 நிமிடங்களில் நுரையீரலின் செயல்பாடுகளும் நின்றுவிடும். இவை இரண்டுமே நின்றவுடன் நமது மூளை 5 நிமிடங்களுக்கு செயல்படும். இந்த 5 நிமிடங்களுக்குள் நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுக்கும் சிபிஆர் சிகிச்சையை செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும்.

அவசர நிலை
ஹார்ட் அட்டாக்கும் அவசர நிலைதான். நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு செல்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து கொடுப்பது இதயம்தான். இதயத்திற்கே ரத்தத்தை சப்ளை செய்வது கரோனரி ஆர்ட்ரி என்பதாகும். இந்த ஆர்ட்டரியின் செயல்பாடு என்னவென்றால் இதயம் துடிப்பதற்காகவும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்புவதற்கும் பயன்படுகிறது.

கொழுப்பு நிறைந்த உணவு
கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்தல், ரத்த அழுத்தம் அதிகரித்தல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் அதிகமாகுதல், மன உளைச்சல் அதிகம், மது பழக்கம், புகை பழக்கம் ஆகியவற்றால் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும். இந்த அடைப்பு ரத்த குழாய்களை முழுமையாக அடைக்கும் போது நெஞ்சு வலி வரும்.
ஹார்ட் அட்டாக் வந்தால் நெஞ்சு வலிதான் வரும் என்றில்லை. சிலருக்கு இடது புற தோள் பட்டை பகுதியில் வலியை கொடுக்கும். கழுத்து பகுதி, தொண்டை பகுதிகளில் இறுக்கம் தெரியும், மூச்சுத் திணறல், வாந்தி, அதிகமாக வியர்த்தல், சிலருக்கு நெஞ்சு பகுதியிலிருந்து பின்புறம் வரை வலி இருக்கும். இவையெல்லாம் ஹார்ட் அட்டாகின் அறிகுறிகளாகும்.

அறிகுறிகள்
இந்த அறிகுறிகள் இருந்தால் நாம் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், காப்பாற்றிவிடலாம். தற்போது நிறைய டெக்னாலஜி வந்துள்ளது. ஆஞ்சியோ செய்து எந்த ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யலாமா, இல்லை மாத்திரையிலேயே கரைக்கலாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்து சிகிச்சை அளிப்பர். இவ்வாறு டாக்டர் தீபா தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications