இலவச போன் டூ ரேஷன் கூப்பன்.. அதிமுக அறிவித்து 2016ல் நிறைவேற்றாத வாக்குறுதிகள்.. என்னென்ன தெரியுமா?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டு உள்ளது. பல முக்கியமான வாக்குறுதிகளை இதில் அதிமுக வழங்கி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்... கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்த போது அதிமுக எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று இங்கே பார்க்கலாம்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) தனது முதல் கட்ட வாக்குறுதிகளை சனிக்கிழமை அன்று வெளியிட்டது.

1. 'குலவிளக்கு திட்டம்' எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் அட்டைதாரர் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் இந்த உதவித்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
2. நகரப் பேருந்துகளில் ஆண், பெண் இருபாலருக்கும் இலவசப் பயணம்
3. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணி நாட்களை 125லிருந்து 150 ஆக உயர்த்தப்படும்.
4. வீடற்றவர்களுக்கு நகர்ப்புறங்களில் குடியிருப்புகள் வழங்குதல், திருமணத்திற்குப் பிறகு மகன்கள் தனிக்குடித்தனம் அமைக்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயக் குடும்பங்களுக்குத் தனி வீடுகள் கட்டுதலுக்கு நிதி உதவி செய்யப்படும்.
5. 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.
இரண்டு வாக்குறுதிகள் ஒப்பீடு
இப்படிப்பட்ட நிலையில்... கடந்த 2016 சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்த போது அதிமுக எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று இங்கே பார்க்கலாம்.
அதிமுக 2016 சட்டமன்றத் தேர்தலில் அளித்த 321 வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை. 2016-2021 ஆட்சிக்காலம் முடிவதற்குள் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில திட்டங்களுக்கு மட்டுமே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மற்றவை கிடப்பில் போடப்பட்டன. நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக சார்ந்த அறிவிப்புகள் பல பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டன.
அதிமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
நலத்திட்ட வாக்குறுதிகளில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன் திட்டம் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை மேலும், பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கோ-ஆப்டெக்ஸ் கூப்பன்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
ஏழைகளின் அரசு சேவைகள், வங்கி பரிவர்த்தனைகளுக்காக அறிவிக்கப்பட்ட 'அம்மா பேங்கிங் கார்டு' அறிவிப்போடு நின்று போனது.. ஆனால் தொடங்கப்படவில்லை. பொது இடங்களில் இலவச வைஃபை திட்டம் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. முதலில் ஐந்து நகரங்களில் தினசரி 20 நிமிட இலவசப் பயன்பாட்டுடன் மட்டுப்படுத்தப்பட்டு, விரிவடையவில்லை. அதன்பின் அதுவும் நீக்கப்பட்டது.
படிப்படியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2019-க்குள் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896-ல் இருந்து 5,198 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை.
உள்கட்டமைப்புத் திட்டங்களில், மீனம்பாக்கம்-செங்கல்பட்டு மேம்பாலம் அறிவிக்கப்பட்டும் தொடங்கப்படவில்லை; இது மெட்ரோ திட்டங்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அதேபோல் சென்னை-கன்னியாகுமரி கடற்கரைச் சாலை விரிவாக்கப்படும் என்ற திட்டம் முன்னேற்றமின்றி நின்றது. சென்னை மோனோ ரயில் திட்டம், ஒரு பகுதிக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டு, மற்றவை மெட்ரோவுடன் இணைக்கப்பட்டதால் நிறைவேறவில்லை. அந்த மோனோ ரயிலும் நிறுத்தப்பட்டது.
முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
ஏரோ பார்க் மற்றும் மொபைல் இ-கவர்னன்ஸ் திட்டங்கள் தொடங்கப்படவில்லை. திருமழிசை துணைக்கோள் நகரம், மதுரை விமான நிலையம் அருகே ஒருங்கிணைந்த நகர திட்டங்களும் எந்த வளர்ச்சியுமின்றி கிடப்பில் போடப்பட்டன. அதேபோல் மிக முக்கியமான இலவச ஸ்கூட்டர் திட்டம் சில பெண்களுக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்பட்டதோடு நிறுத்தப்பட்டுவிட்டது. திட்டம் விரிவாக தொடங்கப்படவில்லை.
இந்தக் குறைபாடுகளை திமுக விமர்சித்தது. 2011-2021 வரையிலான 10 ஆண்டுகால ஆட்சியில், 321 வாக்குறுதிகளில் ஒரு பகுதி மட்டுமே நிறைவேறியதாக திமுக சுட்டிக்காட்டியது. முழுமையான தேர்தல் அறிக்கை கிடைக்கவில்லை என்றாலும், ஆய்வுகள் இந்த முக்கிய நிறைவேறாத உறுதிமொழிகளை உறுதிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications