Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தட்டி தூக்குது தாம்பரம்.. சென்னை மாநகராட்சியின் மாஸ் இதுதான்.. ஆமா, அதென்ன ஓஆர்எஸ்? மக்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தாம்பரம் உட்பட மொத்தம் 158 இடங்களில் குடிநீருடன் ஓஆர்எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. ஓஆர்எஸ் கரைசல் என்பது என்ன?

தொற்று பாதிப்பு ஏற்பட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்... இந்த வயிற்றுப்போக்கு பிரச்சனையை பலரும் சாதாரணமாக நினைத்து கடந்துவிடுகிறார்கள்.. ஆனால், மிகவும் எளிமையான, பயனுள்ள சிகிச்சைகள் இருந்தபோதும், தினமும் 1,300 குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதாக யுனிசெஃப் அதிர்ச்சி தகவலை சொல்கிறது.

Do you know the meaning of ORS Oral Re-hydration Salts and what happened in Chennai Tambaram

காரணம், இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட வைரஸ் தொற்றுதான் முக்கிய காரணியாக உள்ளது.. வயிற்றுப்போக்கின்போது அதிகப்படியான நீர் மற்றும் உப்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது..

பரிந்துரை: அதனால்தான், உலக சுகாதார நிறுவனமும், யுனிசெஃப் அமைப்பும், அனைத்துவிதமான வயிற்றுப்போக்குக்கும் ஓ.ஆர்.எஸ் கரைசல் (Oral Re-hydration Salts) என்ற உப்பு - சர்க்கரை கரைசலையே பரிந்துரை செய்கின்றன... இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, ஒவ்வொரு வருடமும் ஜூலை 29-ம் தேதி ஓ.ஆர்.எஸ் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலில் நிறைய தாதுஉப்புகள், சர்க்கரை உள்ளதால், வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர், உப்புச்சத்துக் குறைபாடு சீர்செய்யப்படும். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கால் டம்பளரும், 2 முதல 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை டம்ளரும், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அவர்களால் குடிக்க முடிந்த அளவு குடிப்பதும் நல்லது.. அதிகபட்சமாக 2 லிட்டர் குடிக்கலாம்.

கரைசல்: ஓ.ஆர்.எஸ் கரைசலை எப்படி உபயோகிப்பது தெரியுமா? 1 லிட்டர் சுத்தமான தண்ணீரில் ஒரு பாக்கெட் ஓ.ஆர்.எஸ் கரைசலுக்கான பொடியை சேர்த்து கரைத்து குடிக்கலாம்.. இப்படி கரைக்கும்போது, வெறும் ஓ.ஆர்.எஸ் கரைசலை மட்டுமே கரைக்க வேண்டும். பால், சூப், பழச்சாறு, கூல்டிரிங்க்ஸ் இப்படி எதுவுமே அதில் கரைக்கக்கூடாது...

அதேபோல, இந்த கரைசலில் கூடுதலாக சர்க்கரை சேர்க்கவும் கூடாது... அப்படி சேர்த்தால், அதில் ஏற்கனவே கலக்கப்பட்டிருக்கும் விகிதாசார அளவையே மாற்றி, பயனற்றதாக்கிவிடும்.. அதுவும் இல்லாமல், அதிக சர்க்கரை வயிற்றுப்போக்கை இன்னும் ஜாஸ்தியாக்கிவிடும். ஒருமுறை கரைத்த கரைசலை 24 மணி நேரம் வரை மட்டுமே, நன்றாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

டிஹைடிரேஷன்: இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைவலி, தலைசுற்றல் மற்றும் டிஹைடிரேசன் ஏற்படுவதால் ஓ.ஆர்.எஸ். கரைசல் 2.96 லட்சம் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும், பஸ் ஸ்டாண்டுகள், பூங்காக்கள் உள்ளிட்ட 158 இடங்களில் குடிநீருடன் ஓஆர்எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர், நேரடி ஆய்வு மேற்கொண்டபோது சொன்னதாவது, "தாம்பரத்தில் 40 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.. மாநகராட்சியின் 23 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது. குடிநீர் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சனை: மேலும், குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் திருநீர்மலை, பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் மூன்று தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடைகாலமான தற்போதும் தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், விழிப்புணர்வில் மாநகராட்சி தெரிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+