டாஸ்மாக்கில் 100 மி.லி மதுப்பாட்டில் அறிமுகம்? 100 மில்லி விலையை பாருங்க.. தமிழ்நாடு அரசு திட்டம்?
சென்னை: தமிழ்நாட்டில் 100 மில்லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது.. கள்ளச்சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் காவு வாங்கப்பட்ட நிலையில், மது விற்பனையையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடிக்க துவங்கிவிட்டன.

டாஸ்மாக்: டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், கூலி வேலை செய்பவர்களால், அதை வாங்கி குடிக்க முடியாமல்தான், கள்ளச்சாராயம் குடித்து பலர் இறக்க நேரிடுகிறது, அதனால், குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று மற்றொருபுறம் எதிர்ப்பு குரல்களும் வெடித்துள்ளன.
ஆக, ஒருபக்கம் மதுவிற்பனைக்கு தடை, மறுபக்கம் குறைந்த விலையில் மது விற்பனை என இரண்டுவிதமான கோரிக்கைகள் தமிழகத்தில் ஒரேநேரத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன.
கட்டிங் பாட்டில்கள்: இதனிடையே, கூலித்தொழிலாளர்களும் எளிதில் வாங்கி குடிக்கும் வகையில் கட்டிங் பாட்டில்களை, குறைந்த அளவில், குறைந்த அளவில் விற்பனை செய்ய தமிழக அரசு யோசித்து வருவதாகவும், 90 மில்லி (கட்டிங்) டெட்ரா பேக் என்று சொல்லப்படும் காகிதக் குடுவையில் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், இதற்கு பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.
இதையடுத்து, கூலித்தொழிலாளர்களும் எளிதில் வாங்கி குடிக்கும் வகையில் கட்டிங் பாட்டில்களை, குறைந்த அளவில், குறைந்த அளவில் விற்பனை செய்ய தமிழக அரசு யோசித்து வருவதாகவும், அதனால், 90 மில்லி (கட்டிங்) காகிதக் குடுவையில் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், இதற்கு பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.
இந்தசூழலில்தான், தமிழக சட்டசபை கூடியது.. அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, "தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பம்.. ஆனால் அதற்கான நிலை தற்போது இல்லை" என்று சட்டசபையில் அதிரடியாக அறிவித்தார்...
கற்பூரம்: இது தொடர்பாக பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகனும், "நமது பக்கத்தில் இருக்கும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும்போது, நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும்" என்ற கேள்வியை எழுப்பியிருந்ததை தமிழக மக்களும் உற்றுக்கவனிக்கவே செய்தனர். அப்படியானால், தமிழகத்தில் மது விலக்கு இப்போது இல்லை என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது வாங்குவதற்கு ஏற்ற வகையில் மலிவு விலை மது விற்பனையை தொடங்க தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மதுபான வசதி: அதாவது, டெட்ரா பேக் மூலம் மதுபான வசதிகளை ஏற்படுத்த வேண்டுமானால், மாதக்கணக்கில் கால அவகாசம் தேவைப்படும். அந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் 100 மி.லிட்டர் கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் மதுவிற்பனை செய்யலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறதாம் ..
இதில் 100 மிலி பிளாஸ்டிக் பாட்டில்தான் சிறந்தது என்றும் தமிழக அரசு நினைக்கிறதாம். ஆனால், இப்போதைக்கு இவையெல்லாம் வெறும் பரிசீலனையில் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை. ஆனால், 100 மிலி மதுவை சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் குறைந்த விலைக்கு விற்க முடியும் என்று தமிழக அரசு நம்புவதாக தெரிகிறது..
விலைகள்: ஒருவேளை இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், இதன் விலை ரூ.50 முதல் ரூ.80க்குள் அடங்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த உரிய முடிவுகளை அரசு எடுத்த பிறகே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றாலும், இந்த தகவல்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, கடந்த 2001-ல், தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்த நிலையில், 100 மில்லி லிட்டர் ரூ,15 என்ற மலிவு விலை மது விற்பனை ஆரம்பிக்கப்பட்டு, நாளடைவில் அது நிறுத்தப்பட்டும்விட்டது.. எனவே, அதுபோன்ற ஒரு திட்டத்தை மீண்டும் தொடங்கலாமா? என்பதுகுறித்தும் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறதாம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications