30 வருட பழைய பாடல்! ச்ச்சீ ச்ச்சீ குமாரி ஒரு ச்ச்சீ! பாடலில் வருபவர் இப்போ எப்படி இருக்கிறார்?
சென்னை: இணையம் முழுக்க கடந்த சில நாட்களாக "சி சி சிரே நானி..." (Chhi Chhi Chhi Re Nani) என்ற ஒடியா பாடல் வைரலாகி (Odia Viral Song) வருகிறது. ஒடியா மொழியில் மட்டுமன்றி தமிழிலும் ச்ச்சீ ச்ச்சீ.. குமாரி ஒரு ச்ச்சீ என்று ரீமேக் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த பாடலில் நடித்த சிவப்பு துண்டு அணிந்து வரும் நபர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
ஒடிசாவை சேர்ந்த இந்த பாடல் நாடு கடந்து இன்ஸ்டாகிராமில் உள்ள பல கோடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ராப் பாடகர்கள், புதிய சிங்கர்கள்.. ஏன் அனிரூத் கூட ஒரு பாடலை ஹிட் செய்ய ப்ரோமோஷன் தேவைப்படுகிறது. ஆனால் 30 வருட இந்த பழைய பாடல்.. எந்த செலவும் இன்றி இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து உள்ளது.

இந்த பாடல் யூடியூபில் ஏற்கனவே 120 கோடி பார்வைகளை குவித்துள்ளது. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இந்தப் பாடலைக் கொண்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரீல்ஸ் பதிவேற்றப்பட்டு உள்ளது.
பாடலை உருவாக்கியது யார்?:
பாடலின் தயாரிப்பாளர் சீதாராம் அகர்வால் என்பவர்தான் இந்த பாடலை எழுதியவர். காதல் தோல்வி பற்றி பாடல் எழுத வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார். காதலன் ஊருக்கு போன நேரத்தில் வீட்டு கடனை எல்லாம் அடைக்க காதலி அப்பாவின் தொந்தரவால் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்வதே பாடலின் கரு. சூர்யா ,ஸ்னேஹா , லைலா நடித்த உன்னை நினைத்து படத்தின் கதை போலவே இருக்கிறதல்லவா.. கிட்டத்தட்ட அப்படித்தான்.
ஆனால் பாடலில் சிவப்பு துண்டு போட்டு நடித்தவர் பிபூதி விஷ்வால் என்ற இளைஞர். இந்த பாடல் ஒடியா - பெங்காளி கலந்த பார்டர் ஸ்லாங் ஆகும். இவர் இப்போது இளைஞர் இல்லை.. இவருக்கு 45 வயதாகிவிட்டது. இணையம் முழுக்க பிபூதி விஷ்வாலின் நடையும்.. அவரின் ரியாக்சனும் ஹிட் அடித்து உள்ளது.
எப்படி இருக்கிறார்?
சம்பல்பூரில் உள்ள கோபிந்ததோலாவில் வசிக்கும் பிபூதி விஷ்வால் மேடைக் கலைஞர் ஆவார். அவர் பல மேடை நாடகங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்து உள்ளார். பல உள்ளூர் நாடக நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். அகில இந்திய வானொலியில் (ஆகாஷ்வானி சம்பல்பூர்) பணியாற்றியும் வருகிறார். இந்த பாடலில் நடித்த சிவப்பு துண்டு அணிந்து வரும் நபர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
அந்த பாடலில் இளமையாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் வயதான தோற்றத்தோடு.. முடி முன் பக்கம் கொட்டி தொப்பை எல்லாம் போட்டு கொஞ்சம் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். அந்த பாடலில் வருபவர்தான் இவரா என்று சொல்லும் அளவிற்கு அடையாளமே தெரியாமல் ஆள் மாறிவிட்டார். இந்த பாடலை பாடிய பின்னணி பாடகர் சத்தியநாராயணன் அதிகாரி இப்போது உயிரோடு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த பிபூதி விஸ்வால்?:
1995ல் இந்த பாடல் வெளியானது. இவரின் நாடக நடிப்பை பார்த்து பாடலின் தயாரிப்பாளர் சீதாராம் அகர்வால் இவருக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் 30 வருடங்களுக்கு பிறகு இந்த பாடல் ஹிட் ஆகி உள்ளது. ஆனால் உள்ளூர் அளவில் கேசட்களில் விற்பனை ஆகி ஹிட் அடித்தது. தமிழில் இது போல கிராமத்து பாடல்கள் பல இடம்பெற்று இருக்கும். வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலேயே என்று பாடல் கேஸட்டுகளிலும், கேம் சென்டர்களில் வரும்.
அந்த பாடல் இப்போது வீடியோவாக வெளியாகி ஹிட் ஆனால் எப்படி இருக்கும். அப்படித்தான் 1995ல் உள்ளூர் அளவில் பாடல் ஹிட் ஆனதால் 2005ல் இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். வீடியோ பாடல் வெளியான சமயத்தில் இதை 1000 பேர் கூட பார்க்கவில்லை. இப்போது இத்தனை காலம் கழித்து இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
இதுவரை இந்த பாடல் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், கன்னடா, மலையாளம் என்று பல மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த மொழிபெயர்ப்பும் ஹிட் அடித்து உள்ளது. முக்கியமாக தமிழ் பாடலும் ஹிட் அடித்து உள்ளது.












Click it and Unblock the Notifications