Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏங்க, அவங்கள "ஸ்டாப்" பண்ணுங்க முதல்ல.. எடப்பாடிக்கு திடீர்னு வந்த ஐடியா.. பறந்த தலைகள்.. திமுக ப்ளான்?

எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் புது வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக ஏக உற்சாகத்தில் களமிறங்கி உள்ளது. அத்துடன், எடப்பாடி பழனிசாமி தரப்பு கையிலெடுத்துள்ள புதுவியூகம் குறித்தும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதை திமுகவும் கவனித்து வருகிறது.

இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள்..
இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 படுகுஷி

படுகுஷி

அதிமுக தற்போது படுகுஷியில் உள்ளது.. கடந்த 10 நாட்களாகவே ஈரோடு கிழக்கு தொகுதியில், கலக்கத்துடனும், குழப்பத்துடனும், வலம்வந்து கொண்டிருந்த அதிமுகவினர், இப்போது தேர்தல் களத்தில் முன்பை விட சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் ஈடுபட்டுள்ளனர். வருகிற 9-ந்தேதி ஈரோட்டில் தென்னரசுவை வேட்பாளராக அறிமுகம் செய்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கான கூட்டம், பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே நடைபெறுகிறது.. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.. அந்த மேடையே படுபிரம்மாண்டமாக இருக்கிறதாம்.. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நடத்தப்படுகிறது... கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று சொல்கிறார்கள்..

ஸ்பெஷல்

ஸ்பெஷல்

இலை கிடைத்துள்ள இந்த நேரத்தில், பாஜகவும் தன் ஆதரவை தெரிவித்துள்ளது.. "இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும், என்று பாஜக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை ஸ்பெஷலாக ஒரு அறிக்கை வெளியிட்டு எடப்பாடிக்கான ஆதரவை பதிவு செய்துள்ளார்.. இலையுடன் சேர்த்து பாஜகவின் ஆதரவு கிடைத்துள்ளது, அதிமுகவுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை தந்து வருகிறது.

 வித்தியாச மூவ்

வித்தியாச மூவ்

இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் தமாகா வேட்பாளர் யுவராஜ் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்... ஆனால், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தன்னுடைய மொத்த பலத்தையும் நிரூபிக்கும் தேர்தலாகவே இந்த தேர்தல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. அதற்காகவே, தமாகாவுக்கு பதில், எடப்பாடி நேரடியாகவே போட்டியிட களமிறக்கி உள்ளதாகவும் தெரிகிறது.

 நியூ டீம்

நியூ டீம்

வழக்கம்போல் ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்றாலும், இந்த முறை எடப்பாடி டீம், திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு கையில் வைத்துள்ளதாம்.. இவைகளைதான் அம்மக்களிடம் கொண்டு செல்ல போகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும் கணக்கு போட்டுள்ளாராம்.. அதுமட்டுமல்ல, இன்னொரு புது வியூகத்தையும் எடப்பாடி டீம் கையில் எடுக்க போவதாக சொல்கிறார்கள்.. காரணம் இந்த முறை தேர்தல் களமே வித்தியாசமாக காணப்படுகிறது.

 கையும் இலையும்

கையும் இலையும்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆதரவில் கை சின்னமும், பாஜக ஆதரவில் இரட்டை இலை சின்னமும் நேரடியாக மோதுகின்றன. தமிழக மக்களிடம் தேர்தல் நேரத்தில் சின்னங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. உதயசூரியனா ? இரட்டை இலையா? என்று வரும் போது, போட்டி பலமாக இருக்கும். ஆனால், இங்கு கையும் இலையும் மோதுகின்றன. கையா? இலையா? என வருகிறபோது, தொகுதியில் இலை தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இதனையெல்லாம் ஆராய்ந்துள்ள எடப்பாடி தரப்பு, "ஓட்டுகளை பர்ச்சேஸ் செய்ய நினைப்பவர்களின் திட்டத்தை தடுத்து நிறுத்தினால் போதும். நாம் ஜெயித்துவிடலாம்" என்று கணக்கு போட்டு வருகிறதாம்.

செலவினங்கள்

செலவினங்கள்

அதுமட்டுமல்ல, இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதால் கையை ஜெயிப்பது பெரிய விசயம் இல்லை என்றும் அதீத நம்பிக்கையில் விவாதித்துக் கொள்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.. அதாவது, காங்கிரஸை மட்டுமே குறி வைத்து எடப்பாடி தரப்பு கணக்கு போடப்படுவதாக தெரிகிறது.. ஆனால், திமுகவோ வேற முடிவில் உள்ளது.. திமுகவினருக்கான தேர்தல் செலவினங்களை கவனித்துக் கொள்ளும் அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி இருவருக்கும் முதல்வர் ஸ்டாலின் போனை போட்டு பேசியுள்ளார்.

டெபாசிட்

டெபாசிட்

அப்போது, "இடைத்தேர்தலின் வெற்றி காங்கிரசுக்கான வெற்றியாக யாரும் பார்க்க போவதில்லை. அது நம் கட்சிக்கான வெற்றியாகவும், நம் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையாகவும் தான் பார்க்கப்படும். தொகுதியில் நாம் வெற்றிப்பெறுவோம் என்பதில் சந்தேகம் எனக்கில்லை. ஆனால், அது போதாது... எதிர்த்து நிற்கிற அதிமுக அணியும், மற்ற கட்சிகளும் டெபாசிட் போக வேண்டும். டெபாசிட் இழந்தால் தான் நான் சந்தோஷப்படுவேன்.. திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கிற எல்லோருக்கும் டெபாசிட் போக வேண்டும். அதற்கேற்ப தேர்தல் பணி செய்யுங்கள்'' என்று உத்தரவிட்டிருக்கிறாராம்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

கூவாத குக்கர்

கூவாத குக்கர்

இந்நிலையில், அமமுக தினகரன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.. சின்னம் கிடைக்காதது காரணமாக கூறப்பட்டாலும், உள்நோக்கம் வேறு இருக்கலா என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்போம் என்று ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜகவும் இன்று அறிக்கை வெளியிட்டு, தன்னுடைய ஆதரவை எடப்பாடி டீமுக்கு தெரிவித்துள்ளது.. பாஜகவுடன் மட்டுமல்லாமல், ஓபிஎஸ்ஸுடனும் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் திடீரென சின்னத்தை காரணம் காட்டி தேர்தலில் இருந்து விலகியிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+