விஜய் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா? ஜஸ்ட் மிஸ்.. இல்லைன்னா உலகத்துக்கே தெரிஞ்சிருக்கும்
சென்னை: நடிகர் விஜய் யாருக்கு ஓட்டு போட்டார் தெரியுமா? பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் சுதாரிக்காமல் இருந்திருந்தால் அது ஊருக்கே தெரிந்திருக்கும்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். அது போல் சிவிஜில் செயலி மூலம் 4,861 புகார்கள் வந்தன. அவற்றில் 22 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்றவை தீர்வு காணப்பட்டன.
தமிழகத்தில் இன்று நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 8050, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 183 கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்கு மொத்தம் 1.58 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு ஊர்களில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு அளித்துள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு இருப்பதால் கூடுதலாக வாக்குகள் பதிவாக வாய்ப்பிருக்கிறது.
இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் வாக்குகளை அளித்துள்ளனர். அந்த வகையில் துபாயிலிருந்து வந்த நடிகர் விஜய் நேராக நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தார். துபாயிலிருந்து விஜய் சென்னை வந்துவிட்டார் என தெரிந்தவுடனேயே ரசிகர்கள் ஏராளமானோர் அவருடைய வாக்குச் சாவடியை சூழ்ந்துக் கொண்டனர்.
அவரால் வாக்குச் சாவடிக்குள்ளேயே வர முடியாமல் சிறிது நேரம் தத்தளித்தார். பிறகு போலீஸார் அவரை உள்ளே அழைத்து சென்றனர். அங்கு வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தார். பிறகு அங்கிருந்த கோப்பில் கையெழுத்திட்டார். இதையடுத்து கையில் மை வைக்க சென்றார். அப்போது அவருடைய இடது கையில் காயம் இருந்தது.
நேராக வாக்குப் பதிவு இயந்திரம் இருக்கும் பகுதிக்கு சென்றார். அங்கு அவரை புகைப்படம் ,வீடியோ எடுக்க நிறைய மீடியா புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்தனர். அவர் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்பதை ஒரு பார்வை பார்த்தார். அவர் சுற்றி கேமரா இருந்ததால் அவர் வாக்கு பதிவு செய்யவிருந்த இயந்திரம் நன்றாகவே தெரிந்தது.
நல்ல வேளையாக அங்கு ஒரு போலீஸ்காரர் வந்து வீடியோ எடுத்த மீடியாக்காரர்களை அப்புறப்படுத்தினார். இல்லாவிட்டால் விஜய் யாருக்கு ஓட்டு போட்டார், எந்த வேட்பாளருக்கு நேராக சிகப்பு விளக்கு எரிந்தது என்பது உலகத்திற்கே தெரிந்திருக்கும். பிரபலங்கள் வாக்களிப்பதை பொதுமக்களுக்கு டிவியில் போட்டு காட்டினால் நிறைய பேர் வாக்களிக்க ஆர்வம் காட்டுவர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் வரைதான் அவர்களுக்கு அனுமதி! ஆனால் இவ்வளவு குளோஸாக எப்படி அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மீடியாக்காரர்களை அனுமதித்தார்கள் என தெரியவில்லை. ரஜினி உள்ளிட்டோர் வாக்களிக்கும் போது வாக்கு பதிவு இயந்திரம் எதுவுமே தெரியவில்லை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications