ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு.. தமிழக அரசு சூப்பர் வசதி.. ரேசன் கார்டு தொலைந்துவிட்டதா? இனிமேல் ஈஸி
சென்னை: மிக முக்கியமான ஆவணமான ரேஷன் கார்டுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒருவேளை ரேஷன் அட்டைகள் தொலைந்து போனால் என்ன செய்வது தெரியுமா?
தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம், அட்டைதாரர்கள் அனைவருக்குமே குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நேரடியாகவே பலன்களை பெற்று வருகிறார்கள்.

அதிரடிகள்: இதைத்தவிர, பொங்கல் தொகுப்பு பரிசு, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன..
ரேஷன் கார்டுகளை முகவரி சான்றாக நாம் பயன்படுத்தலாம்... அதேபோல, வங்கி தொடர்பான வேலை அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெற விரும்பினாலும், ரேஷன் கார்டுகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த அளவுக்கு ரேஷன் கார்டுகளின் முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டுகளை நாம் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.
வெப்சைட்: ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டுகள் தொலைந்துவிட்டால், நீங்கள் அரசு அலுவலகத்துக்கு நேரிலேயே சென்று விண்ணப்பித்து பெறும் நிலை இருந்தது. ஆனால், இப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்காகவே, ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும்படியான வசதியை உணவுத்துறை ஏற்படுத்தி தந்துள்ளது.. ரேஷன் கார்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- "பயனாளர் நுழைவு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பரை பதிவிட வேண்டும் .
- பிறகு பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி-யை பதிவிட வேண்டும்.
- ரேஷன் கார்டு டவுன்லோடு செய்ய, " ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து, Save என்ற ஆப்ஷனை தந்தால் போதும். PDF வடிவத்திலேயே உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
ஆஃப்லைன் முறையிலும் ரேஷன் கார்டுகளை பெற வேண்டுமானால், மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். இதற்கு சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படும்.
குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ரேஷன் கார்டு எண், குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அடையாள சான்றிதழ்கள் போன்ற அனைத்து ஆவணங்களையும் கையோடு கொண்டு செல்ல வேண்டும்.
ரசீதுகள்: பிறகு, அங்கிருக்கும் நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, அத்துடன் அபராத கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைக்க வேண்டும். மேலும், கையிலுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தாலே போதும். மீண்டும் ரேஷன் கார்டுகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications