புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
சென்னை: புறம்போக்கு நிலம் என்ன? இதன் வகைகள் என்ன? புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா கிடைக்குமா? இந்த பலனை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன?
புறம்போக்கு நிலங்கள் என்பவை அரசுக்கு சொந்தனமானதாகும்.. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, விளைநிலம் ஆக்கப்படாத இடத்தை ஏரிகுளம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மற்றும் பொதுவாக அந்த அனைவரும் உபயோகிப்பதால், புறம்போக்கு நிலம் என்றும் சொல்வார்கள்..

தரிசு நிலங்கள்: இதில், தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு இப்படி அனைத்துமே பொதுப்பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகள் புறம்போக்கு நிலங்களில் அடங்கும்.
சுருக்கமாக சொன்னால், பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை, புறம்போக்கு நிலம் என்பார்கள். அந்தவகையில், இவைகள் விவசாயம் செய்யமுடியாத நிலங்கள் ஆகும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும், இப்படி புறம்போக்கு இடங்கள் அரசால் ஒதுக்கப்பட்டிருக்கும்.
புறம்போக்கு நிலம்: புறம்போக்கு நிலங்கள் என்றாலும் இதில் நிறைய வகை உண்டு.. குறிப்பாக, நத்தம் என்பதில் மட்டும், மக்கள் வீடு கட்டிக்கொள்ள அனுமதி உண்டு.. இதை அரசாங்கமே வழங்கும்.. இதற்கு முறையான ஆவணங்களும் உண்டு.. ஆனால், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மற்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டிக்கொள்ளக்கூடாது..
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 2018ம் ஆண்டு, புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா வாங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. அதாவது, புறம்போக்கு நிலத்தை 5 வருடங்களுக்கு மேல் வைத்திருந்தால் அந்த நிலத்தை உரிமை கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசு பட்டா: தமிழகம் முழுவதும் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் பொதுமக்கள், அரசு பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர்.. இதையடுத்துதான், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு நிலங்களை வரைமுறைப்படுத்துவதற்கான நெறிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டன
அதன்படி, அரசுக்கு தேவையில்லாத புறம்போக்கு நிலத்தில் தங்கியிருந்தால், அவர்கள் பட்டா பெறுவதற்குத் தகுதியானவர்கள் ஆவர்.. அனைத்துவிதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களைத் தவிர்த்துவிட்டு, பிற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புசெய்துள்ளவர்கள், இந்தத் திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்..
2 வகைகள்: எனவே, இவர்கள் ஆக்கிரமித்துள்ள இடத்தை வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.. இந்த புறம்போக்கு நிலத்தில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் மற்றும் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்று 2 வகைகள் உள்ளன
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் என்பது ஊரில் உள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை ஆகியவையாகும்.. இதில் கிராம நத்தம் என்பதில், பட்டவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம். ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலம் என்பது, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய், மயானம், காடு, தோப்பு, இங்கெல்லாம் நிலத்தை வாங்கவே முடியாது. அனுமதியும் கிடைக்காது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications