தங்கத்தில் நகைகள்..வெள்ளிக்கிழமை இதை மட்டும் பண்ணாதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளிக்கிழமை தானம் தரலாம்
சென்னை: வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சில பொருட்களை தானம் தரக்கூடாது என்பார்கள்.. ஏன் தெரியுமா? ஆன்மீகம் சொல்லும் காரணம் என்ன?
இந்துசமய முறைப்படி, இறைவனுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது.. எனவே, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளும், தெய்வீகம் நிறைந்த புனித நாளாகவே கருதப்பட்டு வருகிறது.. அதனால்தான் வெள்ளிக்கிழமைகளில் எல்லா விதமான கடவுள்களையும் வணங்க சொல்கிறார்கள்.. இதனால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.. குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்குமாம்.

இந்த புனித வெள்ளிக்கிழமையை கணக்கில் வைத்தே சில பொருட்களை தானமாக தர சொல்கிறார்கள்.. எந்தெந்த பொருட்களை தானமாக தரலாம் தெரியுமா?
பண விவகாரம்: முதலில் பண விவகாரத்தில் சரியாக இருக்க வேண்டுமாம்.. வெள்ளிக்கிழமையன்று யாருக்கும் கடன் தரவே கூடாது.. அப்படி கடன் தருவது, நிறைய சிக்கலை இரு தரப்பிலும் உண்டுபண்ணிவிடுமாம். எனவே, கடன் வாங்குபவருக்கும், கடன் பெறுபவருக்கும் நிம்மதியே போய்விடும் என்பதால், கடன் தரக்கூடாது என்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் இனிப்பு நிறைந்த சர்க்கரை உட்பட எந்தவொரு வெள்ளை நிறத்திலுள்ள பொருட்களையும் தானமாக தரக்கூடாதாம்.. இதில் வெள்ளை நிறத்திலான அரிசியை சேர்த்து கொள்ளலாம். அரிசியையும் தானம் செய்யக்கூடாது.. இதில், தயிர், உப்பு, இட்லி, தோசை மாவு, போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.
ஒட்டடை: வெள்ளிக்கிழமையில் வீட்டிலுள்ள ஒட்டடை அடிக்க வேண்டாம் என்பார்கள்.. பாத்ரூமையும் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யக்கூடாதாம்.. அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது.. ஆனால், வெள்ளிக்கிழமையில் பூஜை அறையை சுத்தம் செய்யலாம்.. வெள்ளிக்கிழமைகளில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக்கூடாது, அழுக்குகள் சேர்ந்தால் கடன் தொல்லை வந்துவிடுமாம்.
வெள்ளிக்கிழமைகளில் தங்க நகைகளை கழட்டக்கூடாது, அந்த நகைகளை சுத்தம் செய்யவும்கூடாது, அதை பிறருக்கு தரவும் கூடாது.. வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவோ, ஷேவிங், முடிவெட்டவோ கூடாது.. அதேபோல நகம வெட்டவும் கூடாது..
தானங்கள் என்னென்ன: அப்படியானால் வெள்ளிக்கிழமைகளில் தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன தெரியுமா? உலோக தானங்கள் நிறைய செய்ய வேண்டுமாம்.. சர்க்கரை பொங்கல் தானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்யலாம் செய்தால் நல்லது என்கிறார்கள்..
வெள்ளிக்கிழமை என்றில்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம் தானம் செய்யலாம். திங்கட்கிழமைகளில் நெய், செவ்வாய்க்கிழமைகளில் மரக்கன்று தானம் செய்யலாம். அதேபோல புதன்கிழமை, கல்வி உபகரணங்கள், வியாழக்கிழமைகளில் வஸ்திரம் போன்றவற்றையும், சனிக்கிழமை எண்ணெய்யை தானமாக அளிக்கலாம். இதன்மூலம், தடைகள் அகலும் என்று அறிவுறுத்துகிறார்கள்.. ஆனால், ஏழைகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் அன்ன தானம் செய்யலாம் என்பது மிக முக்கியமானது...!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications