Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 50 நிமிடம்..அமித்ஷா "அந்த"பேரை சொன்னதுமே.. எடப்பாடி பழனிசாமி முகத்தில டென்ஷன்.. விஷயமே வேற போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி இறுதியாகி உள்ள நிலையில், சீட் விவகாரங்களும் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதில், பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையும், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிட தலைவர்கள் வைத்த கோரிக்கை குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளன.

நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த சந்திப்பின்போது இருந்திருக்கிறார்..

 Do you know what did edapadi palanisamy say about Sasikala and ttv dinakaran

அப்போது 2 தரப்பிலும் சில முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டதாக தெரிகிறது.. முதலாவதாக, எம்பி தேர்தலுக்கான கூட்டணி இந்த சந்திப்பில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் 2 தரப்புகளுமே தங்கள் தரப்பு நிபந்தனைகளை முன் வைத்திருக்கிறார்கள்.

பாஜக சீட்: இதில் பாஜகவை பொறுத்தவரை, கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட இந்த முறை கூடுதல் இடங்கள் நிச்சயம் வேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக, கொங்கு பகுதியிலும், அதிலும் நீலகிரி தொகுதியையும் சேர்த்து ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்டார்களாம்.. இதுபோக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அதற்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாக வேண்டும் என்றும் பாஜக கோரிக்கையை வைத்ததாம்..

காரணம், வரும் 2024 எம்பி தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும், அப்போதும் 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார்.. அதோடு 400 இடங்களில் வெற்றி என்ற இலக்குடன் செயல்படுவதாலும், இந்த முறை அதிக இடம் வேண்டும் என்று அதிமுகவிடம் டிமாண்டு செய்ததாம் பாஜக..

அதுமட்டுமல்ல, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட வேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்கப்பட்டதாம்.. ஏனென்றால், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் இப்போதிருந்தே மத்திய அமைச்சர்களை களம் இறக்கும் திட்டத்தை ஏற்கெனவே பாஜக வகுத்து வைத்திருப்பதுதானாம்..

எடப்பாடி பேச்சுவார்த்தை: இதற்கு எடப்பாடி பழனிசாமி, "அதிமுக இந்த முறை, மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்க இருப்பதால், இப்போதே எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது" என்று பிடிகொடுக்காமல் பேசினாராம்.. பிறகு, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை அமித்ஷா பேச்சையெடுத்தாராம்.. "அதிமுக மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்று சேர்த்து தேர்தலில் நில்லுங்கள்" என்று அமித்ஷா சொன்னதற்கு, எடப்பாடி மறுத்துள்ளார்.. கட்சி முழுமையாக தன்னிடம் வந்து விட்டது. அவர்களை சேர்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னாராம்..

தவிர்க்க வேண்டும்: அதுமட்டுமல்ல, தாங்கள் மட்டுமே அதிமுக என்பதால் ஓபிஎஸ் தரப்பிடம் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும், ஓபிஎஸ் தரப்பினரை சந்திப்பது உள்ளிட்டவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்றைய இந்த பேச்சுவார்த்தை குறித்து மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன..

எப்படி பார்த்தாலும், கூட்டணியை சுமூகமாக தொடர்ந்து எடுத்து செல்ல டெல்லி பாஜக தலைமை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று அமித்ஷா உறுதியளித்திருக்கிறாராம்.. அந்தவகையில், 2 தரப்பிற்கும் இந்த சந்திப்பு நிறைவான சந்திப்பாகவே முடிந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. எப்படி பார்த்தாலும், 5 முதல் 7 தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கும் என்கிறார்கள் விவமறிந்தவர்கள்.. ஆனால், மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாசன், பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் கேள்விப்பட்ட சில விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

எத்தனை சீட்: அதில், "டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில், சீட் எத்தனை என்பது உட்பட எந்தெந்த இடங்களில் போட்டி என்பது வரை பேசப்பட்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமியிடம், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பாஜக தரப்பில் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுவிட்டார்.. அந்தவகையில், பாஜக 13 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 39-ல் 13 சீட்டுக்களை ஒதுக்க எடப்பாடியும் சம்மதித்துவிட்டார்.. 15 சீட்டுக்களை அதிமுக ஒதுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. ஆனால், 13 சீட்டுக்கள் நிச்சயம்" என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இதில் ஹைலைட் என்னவென்றால், சமீபகாலமாகவே, அதிமுகவுக்கு சங்கடம் தரும் வகையில் அண்ணாமலை பேசிவருவது குறித்து, அமித்ஷாவிடம் புகார் சொன்னாராம் எடப்பாடி.. மேலும், "வார் ரூம் என்ற பெயரில் அங்கிருந்து எனக்கு எதிராக நிறைய ட்வீட்களை வெளியிட்டு வருவதாககூறி அதற்கான ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் எடுத்து காட்டினாராம்.. அனைத்தையும் பொறுமையாக கேட்ட அமித்ஷா, நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னாராம்.. பிறகு, அனைவரும் சேர்ந்து க்ரூப் போட்டோ எடுக்க அடுத்த ரூமுக்கு போயிருக்கிறார்கள்.

சுமூகமான சூழல்: அந்த ரூமில் தேசிய தலைவர் நட்டாவும், அண்ணாமலையும் இருந்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துவிட்டாராம். காரணம், அவ்வளவு நேரம் அண்ணாமலை பற்றி புகார்களை அடுக்கி கொண்டிருந்தநிலையில், அமித்ஷா வீட்டுக்கே அண்ணாமலை வந்திருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். அதற்குபிறகுதான், வேறு வழியில்லாமல் அனைவரும் ஒன்றாக போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.. பிறகு, எடப்பாடி + அண்ணாமலை இரு தரப்பிலுமே, இனி சுமூகமாக நடந்து கொள்வோம் என அமித்ஷாவிடம் உறுதி அளிக்கப்பட்டதாம்.. ஆக மொத்தம் நேற்றைய தினம் நடந்த இந்த சந்திப்பும், பேச்சுவார்த்தையும், அதிமுக - பாஜக தொண்டர்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+