வைகோவை விடுங்க.. "அப்பா" நல்லா இருக்காரா.. ஸ்டாலினிடம் கேட்ட ஜெயலலிதா.. பூரித்த மருது அழகுராஜ்.. ஏன்

ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் திமுக பற்றி கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் நாகரீகம் அவசியமான ஒன்று.. அன்று ஸ்டாலினிடம் முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்பா நல்லா இருக்காரா? என்று நலம் விசாரிக்கவில்லையா? என்று அதிமுகவின் மூத்த தலைவர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரும் மூத்த தலைவருமான மருது அழகுராஜ் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அப்போது, அவரிடம், ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்த மருது அழகுராஜ், திமுக மற்றும் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்தும் சில கருத்துக்களை கூறியுள்ளார்.. அதன் சுருக்கம்தான் இவை:

 ஜானகி டீம்

ஜானகி டீம்

"எப்போதுமே வலுவான தலைமை உருவாகும்வரை, இதுபோல் பிறர் தயவில் இருக்க வேண்டிய நிலைமை யாருக்கானாலும் வரத்தான் செய்யும்.. ஏன் அன்று வைகோவுக்கும் திமுகவுக்கும் பிளவு வந்தபோது, திமுகவைதான் மறைமுமாக காங்கிரஸ் ஆதரித்தது.. 1989-ல் ஜானகி - ஜெயலலிதா அணி பிரச்சனை வந்தபோது, ராஜீவ்காந்தி ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கும், திமுகவுக்குள் உள்ளுக்குள் மறைமுக உறவு இருந்தாலும், வெளியில் நேரெதிர் போட்டியாளர்கள் போல காட்டி கொள்கிறார்கள்..

 கலைஞர்

கலைஞர்

சட்டசபையில் கலைஞரை, எடப்பாடி பழனிசாமியும்தானே வாழ்த்தி பேசினார்.. துரைமுருகனை 35 நிமிடம் வாழ்த்தி பேசினாரே கேபி முனுசாமி.. நான் பார்த்த சட்டமன்றத்திலேயே இதுதான் ஜனநாயகம் செழித்த சட்டசபை என்று செங்கோட்டையன் பேசினாரே.. அப்படி என்றால் எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லையா? ஏன் எடப்பாடி காலத்திலும் ஜனநாயகம் இல்லையா? செங்கோட்டையனை இதுவரை யாராவது கண்டித்தார்களா?

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

கொரோனா நடவடிக்கைகளை சிறப்பாக செய்கிறார்கள் என்று ஆர்பி உதயகுமார் திமுகவை ஆராதனை செய்தாரே? உதயகுமாரை யாராவது கண்டித்தார்களா? ஓபிஎஸ் சட்டசபையில், கலைஞர் ஆட்சி பற்றி புகழவில்லை.. மாறாக, அதிமுக பிறக்காத காலத்தில் வந்த படத்தின் வசனத்தை சொன்னார்... அவ்வளவு ஏன், அன்று சுனாமி வந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவை பார்த்து நிதி கொடுக்க வந்தார் ஸ்டாலின்.. சுனாமி நடவடிக்கைகளை சிறப்பாக செய்கிறீர்கள் என்று எல்லாரும் பாராட்டுகிறார்கள், வாழ்த்துக்கள் என்று ஸ்டாலின் சொன்னார்.. அதற்கு ஜெயலலிதா, "அப்பா எப்படி இருக்கிறார்" என்று கேட்டு நலம் விசாரித்து அனுப்பினாரே.

 பச்சை தமிழன் பன்னீர்

பச்சை தமிழன் பன்னீர்

1977-ல் புரட்சித்தலைவர் முதன்முதலில் கொடியேற்ற வந்தபோது, இந்த கொடியை பெற்று தந்த என் நண்பர் கருணாநிதிக்கு நன்றி என்றாரே.. ஜெயலலிதா முன்னிலையிலேயே "பச்சை தமிழன் பன்னீர்செல்வம்" என்று கலைஞர் பாராட்டினாரே.. இதுக்கு அம்மா ஒன்றும் கலைஞர் மீது கோபப்படவில்லையே.. காரணம், ஓபிஎஸ் பெரியகுளத்தில் பெரிய மனிதர்.. அதனால், ஒருவரையொருவர் அரசியலில் பாராட்டி கொள்வதில் தவறில்லை.. ஆனால், இவர்கள் அப்படியா இன்று செய்கிறார்கள்?" என்று மருது அழகுராஜ் கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+