மயில்சாமியின் வீட்டில் எழுதப்பட்டிருக்கும் பொன்னான வாசகம் என்ன தெரியுமா? வாழ்க்கையின் தத்துவம் அது!
மயில்சாமி வீட்டில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் மயில்சாமியின் வீட்டில் வாழ்வியலுடன் பொருந்தி போகும் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும். அது என்ன தெரியுமா?
நடிகர் மயில்சாமி என்றால் நல்ல மனிதர், நல்ல குணம் கொண்டவர் என்றுதான் முதலில் கூறுகிறார்கள். அதன் பிறகுதான் அவரது நடிப்பு, மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பு இதெல்லாம்!
ஆரம்ப காலத்திலிருந்து வாழ்க்கையில் அடிபட்டு முன்னுக்கு வந்தவர். எந்த நடிகரையும் காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி மேலே வந்தவர். தன்னை போல் திறமையுடன் இருக்கும் நபர்களுக்கு வாய்ப்புகளை வாங்கிக் கொடுப்பார்.

சிவபக்தர்
சிவபக்தரான அவர் எப்போதும் யாரை பார்த்தாலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அழைத்து செல்வார். சிவனடியாராகவே மாறி தொண்டு செய்து வந்தார். அதோடு மழை, புயல், வெள்ளம் காலங்களில் விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் ஏழை மக்கள் வயிறார உணவு சாப்பிடுகிறார்கள் என்றால் அது மயில்சாமி கொடுத்த உணவாக இருக்கும்.

நெகிழ்ச்சி
அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் கூறுவார்கள். மயில்சாமி அண்ணன் சாப்பாடு கொடுத்தாரு என! வாழ்க்கையில் பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் நடுவில் வாழும் காலத்தில் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைப்பார். அதை கொள்கையாகவே நினைத்து வாழ்ந்தவர் மயில்சாமி. அவர் சிவன் பக்தர் என்பதால் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

பரிசோதித்த மருத்துவர்கள்
இதையடுத்து அதிகாலை கோயிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிய போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சாலிகிராமத்தில் உள்ள வீடு
இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், நண்பர்கள், அப்பகுதி மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்த வரும் நடிகர்கள் யாராக இருந்தாலும் சொல்வது ஒன்றும் என்னை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார். என்னை திருவண்ணாமலைக்கு வருமாறு அழைத்தார்.

ஜெயராம் பேட்டி
நடிகர் ஜெயராம் கூறுகையில் நானும் மயில்சாமியும் மிமிக்ரி செய்து ஒரே நேரத்தில் சினிமாவுக்குள் வந்தோம். அவர் வாரத்திற்கு ஒரு நாள் எனக்கு போன் செய்துவிடுவார். என்னை நீண்ட காலமாக திருவண்ணாமலைக்கு அழைத்துக் கொண்டே இருந்தார். ஷூட்டிங் இருந்ததால் என்னால் போக முடியவில்லை. கடந்த முறை சிவராத்திரி விழாவின் போதும் என்னை திருவண்ணாமலைக்கு அழைத்தார். அப்போதும் என்னால் வரமுடியவில்லை. இதையடுத்து திருவண்ணாமலைக்கு சிறிய யானை வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டார், நானும் செய்து தருவதாக தெரிவித்தேன். ஆனால் இந்த சிவராத்திரியில் அவர் அண்ணாமலையாரிடமே போய் சேர்ந்துவிட்டார் என உருக்கமாக தெரிவித்தார்.

நல்லவன் வாழ்வான்
மயில்சாமியின் வீட்டின் முகப்பில் நல்லவன் வாழ்வான் என்ற வாசகமும் மறு புறம் அன்பே கடவுள் இல்லம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. அது போல் அவரது வீட்டில் பெரிய சைஸில் விநாயகர் படமும் வைக்கப்பட்டுள்ளது. நல்லவன் வாழ்வான், அன்பே கடவுள் ஆகிய இரண்டுமே வாழ்க்கைக்கு முக்கியமான தத்துவம் ஆகும். இவரது உதவும் குணத்தை பார்க்கும் பிறர் தாமும் வாழ்வில் இப்படி உதவலாம் என்ற ஒரு இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்திவிட்டார் மயில்சாமி என்றே சொல்லலாம். ஒரு ஆர்டிஸ்ட் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக வேட்டியை கட்டிக் கொண்டு மக்களோடு மக்களாக டீ குடிப்பார் என்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications