நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. அப்பதான் கிப்ட் தந்தாங்க, அதுக்குள்ள குப்பை மேட்டர்.. அரண்ட மாமல்லபுரம்
சென்னை: காஞ்சிபுரத்துக்கு வருகை தந்திருக்கும் நிர்மலா சீதாராமன், ராமர் கோயில் நிகழ்ச்சியை பொதுமக்களுடன் இணைந்து காண உள்ளார்.. இதனிடையே, பாஜகவினருக்கு நிதியமைச்சர் முக்கிய அட்வைஸ் ஒன்றினை வழங்கி உள்ளார்.
அயோத்தியில் இன்று கோலாகலமாக நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, காஞ்சிபுரத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்க்க போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரம்: அயோத்தியைப் போலவே காஞ்சிபுரமும் ஏழு 'மோட்ச நகரங்களில்' ஒன்றாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் தசரத மன்னன் 'புத்திரகாமேஷ்டி யாகம்' செய்வதை விளக்கும் சிற்பம் உள்ளது. காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு பிரம்மாண்ட புராணம் மற்றும் கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், அயோத்தியாவில் பிரதமர் மோடி, கலந்து கொள்ளும் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் இணைந்து காணொலிக் காட்சி மூலம் காண உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்திலும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கும்பாபிஷேகம்: இதையடுத்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அதற்காக அமைக்கப்பட்ட எல்இடி திரையில் பொதுமக்களுடன் அமர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, சிறப்பு தரிசனம் மேற்கொள்கிறார்.
இதனிடையே, நேற்றைய தினம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றிருந்தார். மாமல்லபுரம் ஐந்து ரதம் புராதன சின்னம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நிதியமைச்சர் கலந்து கொண்டார். அப்போது, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்தபோது, நிர்மலா சீத்தாராமனுக்கு, பாஜக தொண்டர்கள் நினைவு பரிசு வழங்கினார்கள்.
அப்போது, நினைவு பரிசு வழங்கிய தொண்டர்கள் சிலர் நினைவு பரிசின் கவர்களை அங்கேயே பிரித்து வீசினார்கள்.. இதை பார்த்ததுமே நிர்மலா சீதாராமன் கடும் ஆத்திரமடைந்தார்..

அட்வைஸ்: அங்கிருந்த தொண்டர்களை, "நீங்களே குப்பையை கண்ட இடங்களில் வீசினால், பொதுமக்கள் எப்படி குப்பையை குப்பை தொட்டிகளில் போடுவார்கள்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.. மேலும், அந்த தொண்டர் கீழே போட்ட குப்பையை தானே எடுத்து, அருகிலிருந்த குப்பை தொட்டிக்குள் போட்டார்.. இதைப்பார்த்ததுமே அங்கிருந்த பாஜகவினர் ஆச்சரியத்திலும், நெகிழ்ச்சியிலும் உறைந்தனர்.
அதுமட்டுமல்லாமல், தொண்டர்களை அருகில் அழைத்த நிர்மலா சீதாரைமன், இனிமேல் குப்பையை குப்பை தொட்டியில்தான் போட வேண்டும் என்று அறிவுரையை சொல்லி, காரில் ஏறி புறப்பட்டுவிட்டார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications