அதிகாலையில் ஒரே அல்லோகலம்! கிடுகிடுத்த கிளாம்பாக்கம்.. அங்கே மட்டும் எப்படி? ஸ்டன் ஆகி நின்ற மக்கள்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தினமும் பல லட்சம் பேர் வருகின்றனர். பல ஆயிரம் பேருந்துகள் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். ஆசியாவில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக இது உள்ளது. இங்கே பேருந்து ஏற தினமும் ஒன்றரை லட்சம் பேர் வருகின்றனர்.
சென்னையின் மிகப்பெரிய அடையாளமாகவும் இந்த பேருந்து நிலையம் மாறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே போதிய ஏடிஎம்கள் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. முதலில் ஒரு ஏடிஎம் இருந்தது. அதன்பின் இரண்டு ஏடிஎம்தான் இருந்தது. இது மக்களுக்கு கடுமையான பிரச்சனைகளை கொடுத்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே மொத்தமாக 5 வங்கிகளின் 5 ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 5 ஏடிஎம்கள் காரணமாக மக்கள் இடையே மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
அதிர்ச்சி: அங்கே அதிகாலையில் நடந்த சம்பவம் ஒன்று மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று பவுர்ணமி என்பதால் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதால் வடமாவட்டங்களுக்கு பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அதிகாலையில் பேருந்துகள் கிடைக்காமல் கடுமையாக கஷ்டப்பட்டனர். போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டது.
இதனால் அதிகாலையில் திருவண்ணாமலைக்கு செல்லும் சில பேருந்துகளை மக்கள் சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் நிலைமை கைமீறி சென்றது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அங்கிருந்த மக்களை சமாதானம் செய்து வைத்து பேருந்துகளில் அனுப்பி வைத்தனர்.
ரயில்நிலையம்: புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே கிளம்பாக்கத்தில் வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் மோசமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இந்திய ரயில்வே மீண்டும் குழப்பமடைந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ரயில் நிலையம் தமிழ்நாடு அரசின் செலவில் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ. 100 கோடி ரூபாயில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
சுவாரசிய சம்பவம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு நடந்த சம்பவம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அங்கே பயணம் செய்ய சென்ற மக்கள் பலரும் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்லும் அளவிற்கு நேற்று முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
அங்கே பெரிய பெரிய திரைகளில் தற்போது விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக அங்கே நேற்று நடிகர் சூர்யாவின் கங்குவா சிஸ்லர் திரையிடப்பட்டது. அங்கே இவர்கள் விளம்பரம் கொடுத்த நிலையில் அது திரையிடப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரிய பெரிய திரைகளில் தற்போது விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். அதோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தினமும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் செல்கின்றனர். அவர்களை உடனடியாக இந்த விளம்பரம் சென்று சேரும்.
இதை எல்லாம் மனதில் வைத்தே விளம்பரம் கொடுக்கப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக அங்கே நேற்று நடிகர் சூர்யாவின் கங்குவா சிஸ்லர் திரையிடப்பட்டது. அங்கே இவர்கள் விளம்பரம் கொடுத்த நிலையில் அது திரையிடப்பட்டது. இதை ரசிகர்கள், மக்கள் பலரும் அங்கேயே நின்று நீண்ட நேரம் பார்த்தது கவனம் பெற்றது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications