மனைவி போதை.. டெயிலர், பெயிண்டர், எதிர்வீட்டு பையன்! சென்னை வில்லிவாக்கம் வில்லி! நம்ம தமிழ்நாடா இது?
சென்னை: மிகப்பெரிய கொடுமை ஒன்று சென்னையில் நடந்துள்ளது.. இது தொடர்பாக போலீசாரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) இவர் பெயின்ட்டராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகளுக்கு 11 வயதாகிறது.. இப்போதுதான் 5ம் வகுப்பு முடித்திருக்கிறார். கோடை விடுமுறை முடிந்ததும் 6ம் வகுப்பு சேரப்போகிறார்.

திருவேற்காடு: இவரது சித்தி வீடு திருவேற்காட்டில் இருப்பதால், அங்கு சென்ற சிறுமி, திடீரென வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளார்.. அதுமட்டுமல்ல, அண்ணன் (பெரியப்பா மகன்) தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும் சொல்லி அழுதிருக்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சித்தி, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், நீண்ட நாட்களாகவே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்திருப்பதால், அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள்.
புகார்: இதையடுத்து சிறுமியின் பாட்டி வில்லிவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.. உடனே போலீசாரும் இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான் நடந்த சம்பவத்தை கேட்டு போலீசாரே அதிர்ந்துபோனார்கள்.
சிறுமியை இந்த அளவுக்கு டார்ச்சர் செய்தது, அவரது அண்ணன் (பெரியப்பா மகன்) என்பது உறுதியானது.. அந்த அண்ணனுக்கு 16 வயதுதான் ஆகிறதாம்.. சாப்பிடுவதற்கு நிறைய சாக்லேட், பிஸ்கட்டுகளை வாங்கி தந்து, இப்படி பாலியல் தொல்லை தந்துள்ளார்..
பாலியல் தொந்தரவு: இந்த சிறுவன் இப்படி பாலியல் டார்ச்சர் தருவதை, எதிர்வீட்டில் வசிக்கும் மற்றொரு 16 வயது சிறுவனும் கவனித்துள்ளான்.. உடனே அவனும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு தந்து வந்துள்ளான்..
இதுபோலவே அதே பகுதியில், டெய்லர் கடை வைத்திருக்கும் குமார் என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துவந்துள்ளார். இவர்களை தவிர, அநத பெரியப்பா மகனின், நண்பர்கள் நிறைய பேரும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார்களாம்.
இப்படியே தொடர்ந்து 6 மாதங்களாக, பாலியல் வேதனைகளை அனுபவித்து வந்திருக்கிறாள் சிறுமி.. இதில் கொடுமை என்னவென்றால், இந்த சிறுமியின் அம்மா, அப்பா ரெண்டு பேருமே தண்ணி அடிப்பார்களாம்.. எந்நேரமும் மதுபோதையில் பெற்றோர் இருந்திருக்கிறார்கள்.. தனக்கு நடக்கும் பாலியல் கொடுமை பற்றி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறாள் சிறுமி.. ஆனால், அவர்கள் மதுபோதையில் கண்டுகொள்ளவில்லையாம்.
விசாரணை: நேற்றுகூட சிறுமியிடம் தவறாக நடந்திருக்கிறார்கள் அந்த காமுகர்கள்.. அதனால்தான் வலிதாங்க முடியாமல் சித்தியை சந்தித்து, எல்லா விஷயத்தையும் சொல்லி அழுதிருக்கிறாள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இப்போதைக்கு சிறுமிக்கு மெடிக்கல் செக்கப் செய்வதுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
சிறுமியின் பாட்டி தந்த புகாரையடுத்து, வில்லிவாக்கம் மகளிர் போலீசார், சிறுமியின் பெரியப்பா மகன், எதிர் வீட்டு சிறுவன், டெய்லர் குமார் ஆகிய 3 பேரையும் போக்சோவில் கைது செய்துள்ளனர்.. இவர்களை தவிர, சிறுமிக்கு வேறு யாரெல்லாம் பாலியல் தொல்லை தந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
வில்லிவாக்கம் வில்லி: இந்த சிறுமியின், அம்மா யார் என்று தெரியவில்லை.. இந்த பிஞ்சு குழந்தை, இன்று சிதைந்து போக காரணமே, போதையில் கிடந்த தாயாகத்தான் இருக்க முடியும்.
இதே வில்லிவாக்கத்தில், கடந்த 2018ம் ஆண்டும் இப்படித்தான் ஒரு பாலியல் வன்கொடுமை நடந்தது.. மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமியை, கொடூர கும்பல் ஒன்று சீரழித்த சம்பவம் இந்த தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது.. இப்போதும் ஒரு குழந்தை கொடூரமாக சிக்கியிருக்கிறாள்.
கொடுமை: எனவே போக்சோவை இங்கே இன்னும் கடுமையாக்க வேண்டியிருக்கிறது.. அல்லது பெண் குழந்தைகள் மீது "கை" வைக்கவே நடுங்கும் அளவுகுகு ஏதாவது பெரிய தண்டனையை தர வேண்டியிருக்கிறது.. இந்த காமுகர்களிடமிருந்து பெண் குழந்தைகளை காப்பாற்ற நமக்கு வேற வழியேயில்லை..!!












Click it and Unblock the Notifications