HDFC வங்கி.. சென்னை செங்குன்றம் ஹெச்டிஎஃப்சி ஏடிஎம் போன நபர்.. டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்.. என்ன பாருங்க
சென்னை: பணம் திருடுவதற்காக ஒருத்தர் ஆசை ஆசையாக ஏடிஎம் ஒன்றிற்குள் நுழைந்தார்.. அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை செங்குன்றம் காமராஜர் நகர் ஜிஎஸ்டி புறவழிச்சாலையில், பழைய சப்-ரிஜிஸ்திரார் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது.. இந்த அலுவலகத்துக்கு பக்கத்திலேயே எச்.டி.எஃப்.சி. வங்கியின் கிளையும் செயல்பட்டு வருகிறது.

ஏடிஎம் : நேற்றிரவு, இந்த ஏடிஎம் சென்டருக்கு ஒரு மர்ம மனிதர் வந்திருக்கிறார்.. பணத்தை திருடுவதற்காக உள்ளே வந்தவர், என்ன ஆச்சோ தெரியவில்லை, ஏடிஎம் மையத்துக்குள்ளேயே ரொம்ப நேரமாகவே நின்று கொண்டிருந்தார்.
ஏடிஎம்முக்குள் போன நபரை காணவில்லையே என்று அங்கிருந்த செக்யூரிட்டி எட்டிப்பார்த்தார்.. அப்போது, அந்த நபர் ஏடிஎம் உள்ளேயே நின்று கொண்டிருந்தார்.. இதனால் சந்தேகம் அடைந்த செக்யூரிட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை கண்காணித்தார்..
செக்யூரிட்டி: அப்போது, அந்த மர்ம நபர், ஒரு பெரிய கல்லால், ஏடிஎம் மிஷினை பலமாக உடைத்து கொண்டிருந்ததை பார்த்து செக்யூரிட்டி அதிர்ச்சி அடைந்தார்..
உடனே, போலீஸாருக்கு விஷயத்தை சொன்னார் செக்யூரிட்டி.. போலீசாரும் விரைந்து அந்த ஏடிஎம் சென்டருக்கு வந்துவிட்டார்கள்.. ஆனால், அந்த மர்மநபரோ போலீஸார் வந்ததுகூட தெரியாமல், பிஸியாக மிஷினை உடைத்து கொண்டிருந்தார்.. எவ்வளவோ முயற்சித்தும்கூட, அந்த மிஷினை அவரால் உடைக்க முடியவில்லை. அதற்குள் போலீஸார் அந்த ஏடிஎம் மிஷினை சுற்றி ரவுண்டு கட்டிவிட்டார்கள்.
விசாரணை: சிறிது நேரம் கழித்துதான், போலீசார் தன்னை சுற்றி வளைத்திருப்பதை அந்த மர்ம நபர் கண்டுபிடித்தார்.. அதற்கு மேல் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.. அந்த மிஷினையும் கடைசிவரை உடைக்க முடியாமல், வேறுவழியின்றி போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார்.. அதற்கு பிறகு, போலீசார் அந்த நபரை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள்..
செங்குன்றம் அடுத்த வடகரையை சேர்ந்த அவரது பெயர் அலெக்சாண்டர்.. 40 வயதாகிறது என்பது தெரியவந்து. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகள்: இதற்கு பிறகு, வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் மெஷினை ஆய்வு செய்தனர்.. ஆனால், அதிலிருந்த பணம் எதுவுமே கொள்ளை போகவில்லையாம்.. அந்த மிஷினை உடைக்க முடியாததால், அவ்வளவு பணமும் தப்பியது என்கிறார்கள்.. ஆனால், கையில் காசு இல்லாமல் இப்படி திருட போனதாக சொல்கிறார் மிஸ்டர் அலெக்ஸாண்டர்..!!












Click it and Unblock the Notifications