மாத சம்பளக்காரர்களே.. நீங்க வருமான வரி கட்டலன்னா என்னாகும் தெரியுமா? பின்னாடியே வரும் அதிரடி இதுதான்
சென்னை: வருமான வரித்துறையை செலுத்துவது என்பது அடிப்படை கடமையாகும்.. ஒருவேளை வரி செலுத்தாவிட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன தெரியுமா? அபராதம் எவ்வளவு தெரியுமா?
வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஏய்ப்புகள்: ஆனாலும் சிலர் வரி ஏய்ப்பு செய்துவிடுகிறார்கள்.. அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.. அதாவது, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு, அல்லது பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படுகிறது.
வருமான வரி தாக்கல் செய்வதை வருமான வரித்துறை மிகவும் எளிமை ஆக்கியிருக்கிறது.. ஆன்லைனிலேயே வருமான வரி தாக்கல் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது..
வருமான வரி: அதேபோல, 2017ம் ஆண்டிலிருந்து வருமான வரி தாக்கல் செய்யத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகு, வருமான வரி தாக்கல் செய்திருந்தால் அது தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாகவே கருதப்படும். அப்படி தாமதமாக தாக்கல் செய்பவர்களுக்கு வருவாய் அடிப்படையில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
இப்படி, தாமதமாக செலுத்தினால் அபராதம் செலுத்த வேண்டும் என்பதுடன், வரிக்கு வட்டியும் சேர்ந்துவிடும். வரிச்சலுகைகள் எதையும் பெற முடியாது. வரி பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு உரிய தேதியில் வருமான வரி தாக்கல் செய்தால், வட்டியுடன் பணம் திரும்பக் கிடைக்கும்.
அபராதம்: வருமான வரிச்சட்டம், 1961ன் பிரிவு 234Fன் படி தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் விதிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், கடந்த நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாதமதாக தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றாலும், இது அனைவருக்குமே பொருந்தாது.
குறைவான தொகையை வரியாக செலுத்துவோருக்கு, அதாவது வரிக்குரிய வருவாயாக கணக்கிடப்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், ரூ.1,000 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம்.
கட்டணம்: அதே நேரம் உங்கள் வரிக்குரிய வருவாய் 5 லட்சத்தை தாண்டினால் 5000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படலாம்.. அதுமட்டுமல்லாமல், நீங்கள் ITR தாக்கல் செய்யும் முன்பே, இந்த லேட் ஃபைலிங் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்லைனிலோ அல்லது உங்கள் வங்கிக்கிளைக்கு நேரடியாக சென்றோ, இந்த அபராதத்தை கட்டி, அதற்கான சான்று ஆவணத்தை இணைத்து வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம்.












Click it and Unblock the Notifications