ஜஸ்ட் ரூ 20 செலுத்தினால் போதும்! ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: வெறும் ரூ 20 செலுத்தினால் மத்திய அரசின் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். எனவே இந்த திட்டத்தை மிஸ் செய்துடாதீங்கள். இதற்கு பெயர் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டம் ஆகும். காப்பீடு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு திட்டம். அதிலும் அரசே இப்படி குறைந்த விலையில் கொடுக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டம் குறைந்த அளவு வருமானம் கொண்ட மக்களுக்கு பொருந்தும். அவர்களுக்கான வாழ்க்கைக்கு பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்திலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு என இருக்கின்றன. அந்த வகையில் மருத்துவக் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை ரூபாய் பிரீமியம் செலுத்தினால் விபத்து, உடல் உபாதைகள் ஏற்பட்டால் நிபந்தனைகளுக்குள்பட்டு அதற்கான செலவை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கும்.
அது போல் ஆயுள் காப்பீடானது ஆண்டுக்கு இத்தனை என பிரீமியம் செலுத்த வேண்டும். விபத்து நேர்ந்து மரணமடைந்தாலும் அகால மரணம் அடைந்தாலும் இயற்கை மரணம் அடைந்தாலும் இத்தனை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது போல் வழங்கப்படும்.
இதுபோல்தான் வாகன காப்பீடும். விபத்து ஏற்பட்டாலோ, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ நிபந்தனைக்குள்பட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும். ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது உதட்டிற்கு காப்பீடு செய்திருந்தார். அது போல் பாலிவுட்டில் ஒரு நடிகை தனது தொடைக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு பிரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ 12 ஆக இருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ரூ 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்கு சென்று இந்த பாலிசியை பெற விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 70 வயது உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்கில் இருந்து ரூ 20 கழித்துக் கொண்டு காப்பீட்டுத் திட்டத்தில் வரவு வைக்கப்படும். அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இந்த காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன.
மேலும் விவரம் அறிய https://nationalinsurance.nic.co.in/en/about-us/pradhan-mantri-suraksha-bima-yojana என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் ஒருவர் இறந்துவிட்டால் ரூ 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். அது போல் விபத்தில் கை,கால்கள் செயலிழந்துவிட்டாலும் அதே தொகை கிடைத்துவிடும். விபத்தில் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டால் ரூ 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு எந்த பணமும் தரப்படாது. ஆனால் கொலை நிகழ்ந்து ஒருவர் இறந்தால் காப்பீடு கிடைக்கும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications